states

img

2.13 லட்சம் ஏடிஎம்களில் சேவைக் கட்டணம் உயர்கிறது

புதுதில்லி, டிச.7- நாடு முழுவதும் உள்ள 2.13 லட்சம்  ஏடிஎம் மையங்களிலும் பணப் பரிவர்த்தனை கட்டணம் ஜனவரி மாதம் முதல் உயர்கிறது. வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்-களில் ஒரு மாதத்துக்கு ஐந்து முறை கட்டணமின்றி பணம் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் மற்ற வங்கி ஏடிஎம்களில் என்றால் மாநகரங்களில் மூன்று முறையும்  மாநகரம் அல்லாத ஏடிஎம் மையங்களில் ஐந்து இலவசப் பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள முடியும்.

இதைத்  தாண்டி தங்கள் வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் எடுத்தால் தற்போது 20 ரூபாயும் மற்ற வங்கி ஏடிஎம்களின் பரிவர்த்த னைக்கு ஜி.எஸ்.டி. உடன் ரூ.23.6 கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2022 ஜனவரி முதல் ஏடிஎம் மையங்களில்  பணம் எடுப்பதற் கான கட்டணம் உயர்கிறது. அதற்கு இந்திய  ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அனைத்து வங்கிகளுக்கும் அனுமதி வழங்கி உள்ளது.  அதன்படி இலவசப் பரிவர்த்தனைகளைத் தாண்டி பணம் எடுத்தால் ஒவ்வொரு பரி வர்த்தனைக்குமான கட்டணம் 20 ரூபாயில் இருந்து 21 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  இலவச பரிவர்த்தனைகளை தாண்டி மற்ற ஏடிஎம்களை பயன்படுத்தினால், ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி-யுடன் சேர்த்து ரூ.25 ஆக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செலவுகள் அதிகரித்திருப்பதால்  பரி வர்த்தனைக் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே ஹெச்.டிஎஃப்.சி மற்றும் ஆக்ஸிஸ் வங்கிகள் கட்டணத்தை அதிகரித்துள்ள நிலையில் ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து மற்ற வங்கிகளும் உயர்த்த இருக்கின்றன.

2.13 லட்சம் ஏடிஎம்கள்

இந்த ஆண்டு செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் நாட்டில் உள்ள மொத்த ஏடிஎம்களின் (தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்கள்) எண்ணிக்கை 2.13  லட்சத்துக்கு மேல் உள்ளதாக நாடாளுமன்றத் தில்  ஒன்றிய நிதித் துறை இணையமைச்சர் பாகவத் கராட்  எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளார். இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அளித்த தகவலின்படி நாட்டில் உள்ள வங்கிகள் 2021 செப்டம்பா் வரை 2,13,145 ஏடிஎம்களை நிறுவியுள்ளன. இதில் 47.4 சதவீத ஏடிஎம்கள் கிராமப்புறங்கள் மற்றும் வளா்ந்து வரும் சிறிய ஊா்களில் உள்ளன. இவை தவிர வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங் களின் கீழ் 27,837 ஏடிஎம்கள் உள்ளன. ஆண்டுதோறும் குறைந்தபட்சம் புதிதாக 1,000 ஏடிஎம்களை நிறுவும் நோக்குடன் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்போதைய சூழ்நிலையில் பெருநகரங்களைவிட கிராமப்புறங்களில் ஏடி எம்களை அமைக்க முன்னுரிமை அளிக்கப் பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
 

;