புதுதில்லி, ஜூன் 24- நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறு வனத்தின் ஆளெடுப்பில் ரூ.100 கோடிக்கும் அதிக மாக மோசடி அரங்கேறி யுள்ளது. டாடா நிறுவனத்திற்கு சொந்தமான டிசிஎஸ் (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) ஐடி நிறுவனம் இந்தியா மட்டு மின்றி 46 நாடுகளில் கிளைகளை வைத்துள்ளது. மொத்தம் 5 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களை கொண்ட இந்த நிறுவ னத்தில் பணி நியமனத்தின் பெயரில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக மோசடி அரங்கே றியுள்ளது. அதாவது புதிய ஊழியர்கள் தேர்வு செய்வதில் பணியாளர்கள் பரிந்துரை மற்றும் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்க ளின் வழக்கமான ஆளெடுப் பில் 50 ஆயிரம் பேரை பணி யில் அமர்த்தி ரூ.100 கோடிக் கும் மேலான தொகை கைமாறி இருப்பதாக புகார் எழுந்த நிலையில், அந்நிறுவனத்தில் பணியாற் றும் முகம் அறியப்படாத ஊழியர் ஒருவர் புகார் கொ டுத்து ஒட்டுமொத்த ஊழ லையும் அம்பலப்படுத்தி உள்ளார். இந்நிலையில், புகாரின் உண்மைத் தன்மை வெளிப்பட்டதுமே, தலைமை பதவியில் இருக்கும் 4 பேரை டிசிஎஸ் நிறுவனம் நீக்கியுள்ளது. மேலும் 3 தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்களுட னான ஒப்பந்தத்தையும் டிசிஎஸ் ரத்து செய்துள்ளது. இந்நிலையில், இந்த சம்ப வம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழுவையும் டாடா மேலிடம் அமைத்துள் ளது.