பாட்னா, ஜூலை 5 - எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து, விசாரணை அமைப்புக்களை ஏவி விடுவதால், பாஜகவுக்கு மக்களின் ஆதரவு கிடைத்து விடாது என்று பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாட்னாவில் அளித்துள்ள பேட்டியில் அவர் கூறி யிருப்பதாவது: மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் நடந்தது சரியா னதா, இல்லையா என்பதை அந்த மாநில மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் பொதுவாக சில எம்எல்ஏ-க்கள் வெளியேறுவதால் மட்டும் ஒரு கட்சி மக்களிடம் இருந்து தனது ஆதரவை இழக்காது. அஜித் பவார் தலைமையிலான எம்எல்ஏ-க்கள் வெளியேறியது தேசிய வாத காங்கிரஸ் கட்சியில் எந்த தீவி ரமான தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை. மேலும் மகாராஷ்டிராவில் நடந்த பிளவு, அந்த மாநிலத்திற்கு வெளியே எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. கடந்த ஆண்டு பீகாரில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் வேறு எந்த மாநி லத்திலும் பாதிப்பை ஏற்படுத்த வில்லை. பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி மீதான புதிய சிபிஐ குற்றப்பத்திரிக்கையை பொறுத்த வரை, தவறு செய்ததாக கூறி சட்ட நட வடிக்கையை எதிர்கொள்ளும் எந்த அரசியல்வாதியையும் மக்கள் வெறுப்பதில்லை. ஆனால் எதிர்க் கட்சியில் இருப்பவர்களை மட்டும் குறி வைப்பது கவலையளிக்கும் விஷய மாக மாறி வருகிறது. மத்தியில் ஆளும் ஆட்சியுடன் சமாதானம் செய்த வர்கள் மீதான நடவடிக்கை கைவிடப் படுகிறது. விசாரணை அமைப்புகள் மூலம் ஒரு தலைவருக்கு எதிராக எடுக்கும் இதுபோன்ற நடவடிக்கை கள் மக்கள் மத்தியில் ஆதரவைப் பெறாது என்பது என் எண்ணம். இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறி யுள்ளார்.
2024 தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் வலுவான காரணத்தை முன்வைக்க வேண்டும்
“நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை மட்டுமே தேர்தலில் வெற்றியைக் கொண்டு வராது. மாறாக எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு வலுவான காரணம் தேவை. அந்த காரணத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்றால் மட்டுமே தேர்தல் பலன்களை அறுவடை செய்ய முடியும். மாறாக கூட்டணி அடிப்படையிலான கணக்கு மட்டும் இங்கு வெற்றியை தராது. ஆளும் பாஜகவுக்கு எதிரான சூழலை உருவாக்குவதில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால் மட்டுமே தொடர்ந்து வெற்றி பெற முடியும். அவசரநிலை நாட்டில் அமல்படுத்தப்பட்ட போது பாட்னாவில் ஜெயப்பிரகாஷ் நாராயணின் ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி மக்கள் மத்தியில் வெற்றி பெற்றது. வி.பி. சிங்கின் ஆட்சியை பிடிக்க போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு முன்னிலை வகுத்தது. எனவே பாஜக-வுக்கு எதிராக வலுவான காரணம் இல்லாத வெறும் அரசியல் எண் கணிதம் மட்டும், மக்களின் ஆதரவை பெற்று விடாது” என்றும் பிரசாந்த் கிஷோர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.