states

img

பாஜக வேட்பாளர்களை விரட்டி அடிக்கும் பஞ்சாப் விவசாயிகள்!

கடந்த சில நாட்களாக பஞ்சாப் மாநிலத்தில் விவ சாயிகள் சங்கத் தலைவர் கள் சிலர் முன்னெச்சரிக்கை நடவ டிக்கையாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இதற்கு அடிபணிய மறுத்த விவசாய சங்கங்கள் பாஜக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிற் சங்கங்களும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வரு கின்றன. சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர் டாக்டர் தர்ஷன் பால் ‘பாஜகவை அம்பலப்படுத்த வும்,எதிர்க்கவும், தண்டிக்கவும்( Expose,Oppose and Punish BJP)’ எங்கள் போராட்டத்தை நாங்கள் தீவிரப்படுத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். விவசா யிகள் மீது அரசு அடக்கு முறையை கட்டவிழ்த்து விடும் பாஜகவை கட்டுப்படுத்துமாறு தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் வேண்டு கோள் விடுத்துள்ளோம் என்றும் கூறினார். இதற்கிடையில் பாஜகவுக்கும் வேட்பாளர்களுக்கும் எதிரான போ ராட்டங்கள் தீவிரமாகி வருவது குறித்து  தி டிரிபியுன் THE TRIBUNE (18. 5.24) நாளேடு தலையங்கம் தீட்டி உள்ளது.  அதன் முக்கிய பகுதிகள் வரு மாறு: பிப்ரவரியில் ஷம்பு எல்லையில் விவசாயிகள் போராடிய பொழுது அவர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டனர்.அதன் விளைவு? பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தில்  அதன் கரு நிழல் படிந்துள்ளது. பாஜக தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு எதிராக ஆங்காங்கே கருப்புக்கொடி காட்டும் போராட்டங்கள் நடத்தப் படுகின்றன. போராடிவரும் விவசா யிகள் கிராமங்களுக்குள் நுழைய விடாமல் பாஜக வேட்பாளர்களை விரட்டி அடிக்கிறார்கள். குறிப்பாக வால்வா மற்றும் மாஜா பகுதியில் இத்தகைய கடும் எதிர்ப்புகளை பாஜக எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பஞ்சாப் மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான சுனில் ஜாக்கர் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளிடம் இது குறித்து புகார் செய்தார். குறைந்தபட்ச ஆதரவு விலை க்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் கேட்டு மாநில விவசாயிகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் தில்லி சலோ போராட்டத்தை தொடங்கினர்.பாஜக ஆளும் மாநிலமான ஹரி யானாவில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். கடுமையான அடக்கு முறையையும் ஹரியா னா பாஜக அரசு அவர்கள் மீது கட்ட விழ்த்து விட்டது. மத்திய அரசுக்கும் விவசாய சங்கங்களுக்கும் இடை யேயான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்தப்பட்டாலும் குறைந்தபட்ச ஆதார விலை பிரச்சனை இன்னும் தீர்க்கப்படா மல் உள்ளது. இதற்கிடையில் சிரோமணி அகாலி தளத்துடன் பாஜகவிற்கு மோதல்கள் ஏற்பட்டது. சமரச முயற்சிகள் பலனளிக்கவில்லை.ஒன்றிய அரசால் இயற்றப்பட்ட சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்க ளுக்கு  எதிரான விவசாயிகள் போராட்டத்திற்கு இடையே மத்தி யில் 2021 இல் இரண்டு கட்சிக ளும் பிரிந்தன. 2022 ஜனவரியில் பெரோஸ் பூரில் தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி உரையாற்ற வரும் பொழுது” திரும்பிப் போ” என்று எதிர்ப்பாளர்கள் போராடினர்.விவசாய சட்டங்கள் ரத்து செய்யப் பட்டிருந்தாலும் விவசாயிகளின் நம்பிக்கையை தக்க வைப்ப தில் பாஜக தோற்றுவிட்டது. ஹரி யானாவில் கிராமப்புறங்களிலும் பாஜக வேட்பாளருக்கு வேட்பா ளர்களுக்கு எதிரான வெப்பக் கனல்  அனல் வீசுகிறது.விவசாயிக ளின் கோபத்தையும், வேதனையை யும் அது இன்று எதிர்கொள்ளத் தான் வேண்டும். அவர்களின் கடும் எதிர்ப்பை இனிமேலும் புறக்க ணிக்க முடியாது.  இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

;