states

காவி நிறத்திற்கு மாறும் ‘வந்தே பாரத்’ ரயில்கள்?

புதுதில்லி, ஜூலை 8- பிரதமர் மோடி, மாவட்டம் மாவட்டமாக சென்று துவக்கி வைத்து  வரும் ‘வந்தே பாரத்’ ரயில்கள் விரைவில் காவி நிறத்திற்கு மாற விருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் தற்போது ‘வந்தே பாரத்’ ரயில்கள் வெள்ளை நிறத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்தான் வந்தே பாரத் ரயில்களின் நிறம் மாற்றப்பட உள்ளதாகவும், ‘வந்தே பாரத்’  ரயில்கள் ஆரஞ்சு நிறத்தில் (அதாவது காவி நிறத்தில்) இயக்கப்பட லாம் என்றும் கூறப்படுகிறது. தற்போது வரை நாட்டில் மொத்தம் 25 ‘வந்தே பாரத்’ ரயில்கள்  இயங்கி வருகின்றன. அவற்றில், சென்னை - மைசூர் இடை யிலான ‘வந்தே பாரத்’ ரயிலும் ஒன்றாகும். இந்த ‘வந்தே பாரத்’ ரயில்  வெள்ளை நிறத்தில் உள்ளன. மேலும் ரயிலின் சில இடங்களில் நீலநிறமும் ரயிலில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில்தான் இந்த ‘வந்தே பாரத்’ ரயிலின் வண்ணத்தை  மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ‘வந்தே பாரத்’ ரயில் வெள்ளை மற்றும் நீலம் நிறத்தில் இயங்கி வரும் நிலையில், வரும்  காலத்தில் இந்த ரயில் ஆரஞ்சு மற்றும் கிரே நிறத்தில் இயக்கப்பட  வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. வெள்ளை நிறத்தில் வந்தே பாரத் உள்ளதால் எளிதில் அழுக்கு படிகிறது. இது  பயணிகளை முகம் சுழிக்க வைக்கிறது. எனவே, வெள்ளை நிறத்தில்  உள்ள வந்தே பாரத் ரயிலின் நிறத்தை காவி நிறத்திற்கு மாற்ற லாம் என்று முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கேற்ப சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் ‘வந்தே  பாரத்’ ரயில் பெட்டிகளுக்கு வேறு நிறம் பூசும் பணி தொடங்கி யுள்ளது. இதில் ஆரஞ்சு-கிரே காம்பினேஷன் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதே வண்ணத்திலேயே அனைத்து வந்தே பாரத் ரயில்  பெட்டிகளையும் உருவாக்க தற்போது அனுமதி கோரப்பட்டுள்ளது.