states

ஒரு கிலோ தேயிலை விலை ஒரு லட்சம் ரூபாய்

கவுகாத்தி, டிச.15- இந்தியாவில் அதிக விலை கொடுத்து ஒரு கிலோ தேயிலை ஏலம் எடுக்கப் பட்ட சம்பவம் அசாமில் அரங்கேறியுள்ளது. அசாம் மாநிலத்தில் பிரபலமான மனோகரி தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தேயிலை தோட்டத்தில் பயிரிடப்படும் தேயிலைக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. இந்நிலையில் மனோகரி தேயிலை தோட்டத்தில் பயிரிடப்பட்ட ‘மனோகரி கோல்டு’ ரக தேயிலை  கவுகாத்தி தேயிலை ஏல மையத்தில் ஏலம் விடப்பட்டது. அப் போது, ‘மனோகரி கோல்டு’ ரக தேயிலையை கிலோ ஒன்றுக்கு 99,999 ரூபாய்க்கு சவுரப் தேயிலை வியாபாரம் என்ற நிறுவனம் எடுத்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக ஒரு கிலோ  தேயிலை 99,999 ரூபாய் என்ற அளவில் ஏலம்  எடுக்கப்பட்டது இதுவே முதல் முறையா கும்.  இதற்கு முன்னதாக ஒருகிலோ தேயிலை அதிகபட்சமாக 75,000 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கவுகாத்தி தேயிலை ஏலம் எடுப்போர் சங்கச்செயலாளர் தினேஷ் பிஹானி கூறுகையில் “கவுகாத்தி தேயிலை ஏல மையத்திற்கு இது  பெருமையான நேரம், திப்ரூகரின் மனோகரி கோல்டு டீ தனது சொந்தச் சாதனையை முறியடித்து மீண்டும் ஒரு சரித்திரம் படைத்துள்ளது” என்றார்.

;