புதுதில்லி, ஜூலை 8- ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு பிரிவு 370ஐ ரத்து செய்ததை எதிர்த்து தொடுக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட மனுக்களை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மிகத் தாமதமாக தற்போது உச்சநீதி மன்றம் விசாரிக்க உள்ளது. ஜூலை 11 அன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையில் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கன்னா, பி.ஆர்.கவாய், சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய உச்சநீதி மன்ற அமர்வு இந்த மனுக்கள் மீதான விசார ணையை நடத்த உள்ளது. ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியலமைப்பு பிரிவு 370-ஐ தனது பெரும்பான்மை அதிகாரத்தை வைத்து அனைவரின் எதிர்ப்பையும் மீறி மக்களவை யில் குரல் வாக்கெடுப்பின் மூலமாக 2019 ஆகஸ்ட் 5 அன்று நிறைவேற்றி, ஜம்மு-காஷ்மீரை இரண்டாக சிதைத்து யூனியன் பிரதேசங்களாக மாற்ற ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோ தாவையும் அறிமுகப்படுத்தியது பாஜக அரசு. தற்போது ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றம் கொண்ட யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக வும் இருக்கிறது. ஜம்மு- காஷ்மீருக்கு குறைந்த பட்ச சுயாட்சி அதிகாரம் கூட இல்லாமல் செய்து விட்டு மக்களையும் அங்கு கொடுங்கரங்களால் நசுக்கி வருகிறது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உச்ச நீதிமன்றத்தின் விசா ரணையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான யூசுப் தாரிகாமி, ஜம்மு- காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் மெஹபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் வரவேற் றுள்ளனர். அரசியலமைப்பு பிரிவு 370-ஐ ரத்து செய் ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை, ஒரு வழியாக விசாரிக்க முன் வந்த உச்சநீதிமன் றத்தின் முடிவை வரவேற்கிறேன்; மேலும் இது ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு நீதியை நிலை நாட்டும் என நம்புகிறேன் என்று முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். இறுதியாக விசாரணைக்கு அமர்வு அமைக் கப்பட்டுள்ளது. விசாரணையும் உரிய நேரத்தில் துவங்கும் என்று நம்புகிறேன் என முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார். 370 ஆவது பிரிவை ரத்து செய்ததையும் வரலாற்றுச் சிறப்புமிக்க மாநிலத்தை சிதைத்த தையும் எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மிக வும் தாமதமாக விசாரணைக்கு எடுத்துக் கொள் ளப்பட்டிருந்தாலும், இம்முடிவை நாங்கள் வர வேற்கிறோம்; அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல் மற்றும் ஒரு தலைப்பட்சமாக வழங்கப்பட்ட தீர்ப்பு திரும்பப் பெறப்பட்டு 2019 ஆகஸ்ட் 5க்கு முன்பிருந்த நிலைமை மீண்டும் வரும் என்று நம்புகிறேன் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைவர் தாரிகாமி தெரி வித்துள்ளார்.