states

img

2023 - சிறு தானியங்கள் ஆண்டு: தமிழகத்தில் உணவுக் கண்காட்சிக்கு ஏற்பாடு

புதுதில்லி, ஜன.1- 2023-ஆம் ஆண்டை சர்வதேச சிறு தானிய ஆண்டாக ஐக்கிய நாடுகள்  சபை அறிவித்துள்ளது. இதன் நோக்  கம் உலக நாடுகள் சிறுதானியங்களின் உற்பத்திப் பரப்பை அதிகரிப்பதே. இந்தியாவில் சிறு தானியங்கள் உற்பத்திப் பரப்பை அதிகரிக்கவும் உற்பத்தியை அதிகரிக்கவும் அதை  சந்தைப்படுத்தவும் மாநில அரசுகள்,  ஒன்றிய அரசு, விவசாயிகள், வணி கர்கள், உணவகங்கள் இணைந்து செயல்பட உள்ளனர். குறிப்பாக  இந்தி யாவை சிறுதானியங்களின் சர்வதேச  மையமாக மாற்ற வேண்டும் என்று  அரசுத் தரப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ள தாக தெரிகிறது. இந்தியாவில் விளைந்த முதல் தானியம் சிறுதானியம்தான் என்ப தற்கு பல சான்றுகள் உள்ளன. உலகம் முழுவதும் 130 நாடுகளில் சிறுதானி யங்கள் விளைவிக்கப்பட்டாலும்  ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடு களில் 50 கோடிக்கும் மேற்பட்டோரின் பாரம்பரிய உணவாக  சிறு தானியங் களே உள்ளன.    இந்தியாவில் ஜனவரி மாதம் 15 நாட்கள்,  ஒன்றிய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சகம் சார்பில்,  15 நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட உள்ளன. இதில்,  விளை யாட்டு வீரர்கள், ஊட்டச்சத்து மற்றும்  உடற்பயிற்சி நிபுணர்கள் அடங்கிய விழிப்புணர்வு காணொலிக் காட்சி கள் வெளியிடப்படவுள்ளன.   உணவுப் பதப்படுத்தும் துறை அமைச்சகத்தின் சார்பில், ஆந்திரா, மத்தியப் பிரதேசம் மற்றும் பீகாரில் சிறுதானிய உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சிகள் நடத்தப்பட உள்ளன.  

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணை யத்தின் சார்பில், தமிழ்நாடு, கேரளம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில்,  சரி யான உணவைப் சாப்பிடுங்கள் என்ற உணவுக் கண்காட்சி நடத்தப்பட உள்  ளது.  சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான்  ஆகிய மாநிலங்களில் சர்வதேச சிறு தானிய ஆண்டை முன்னிறுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. தமிழக அரசின் அறிவிப்புகள் தமிழ்நாட்டில் இரண்டு சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் அமைக்கப் பட்டுள்ளது. திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களை உள்ள டக்கியதாக முதல் சிறப்பு மண்டலம் அமைக்கப்படும். தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கியதாக இரண்டாவது சிறப்பு மண்டலம் அமைகிறது. துவரைக்கும் சிறப்பு மண்டலம் திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி துவரைப் பயிருக்கென சிறப்பு மண்டலம் அமைக்கப்படுகிறது. அறுவடைக்குப் பின் பயறுகளை சுத்தம் செய்து மதிப்புக்கூட்டி விற்க நடவடிக்கை எடுக்கப்படும். 2022-2023-ஆம் நிதி யாண்டில் ரூ.60 கோடி ஒன்றிய-மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என வேளாண்-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறி வித்துள்ளார்.