states

அசாம் எதிர்க்கட்சித் தலைவர்கள் சிபிஎம் தலைவர்களுடன் சந்திப்பு

புதுதில்லி, ஜூலை 7- அசாம் மாநிலத்தில் செயல்படும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஜூலை 7 வெள்ளிக்கிழமையன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலு வலகத்திற்கு வந்து, தலைவர்களைச் சந்தித்தனர். அப்போது அசாமில் ஆட்சியாளர்கள் தான்தோன்றித்தனமாக சட்டமன்றத் தொகுதி மறுவரையறையை மேற்கொண்டி ருப்பது சம்பந்தமாகத் தங்கள் ஆழ்ந்த கவலைகளைப் பகிர்ந்துகொண்டார்கள். மேலும்  இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் தாங்கள் அளித்திட்ட மனுவின் நகலையும் பகிர்ந்துகொண்டனர். இதற்கு முன்பும் அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்துள்ளனர். ஆயினும் பயனேதும் இல்லை. தொகுதிகள் மறுவரையறை செய்வது தொடர்பாக அரசமைப்புச்சட்டம் அளித்துள்ள வழிகாட்டும் நெறிமுறைகள் எதுவும் பின்பற்றப்படாமல் மீறப் பட்டிருக்கின்றன என்று அசாம் எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர். அசாம் பழங்குடி மக்களின் பிரதிநிதித்துவம் உயர்த்தப்பட்டிருப்பதாக பாஜகவினர் கூறுவதற்கு முரணாக, பாஜகவின் தேர்தல் ஆதாயங்களை மனதில் கொண்டே இவ்வாறு தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர்.

இவர்களின் பிரதான கோரிக்கை, இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களை ரத்து செய்துவிட்டு, முன்பிருந்த நிலையே தொடர வேண்டும் என்பதாகும். இவ்வாறு அசாமிலிருந்து வந்திருந்த தலைவர்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜர் டோம், பூபேன் குமார் போரா, எதிர்க்கட்சித் தலைவர் தேவபிரத சாய்கியா, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ராகிபுல் உசேன், அசாம்  ஜதியா பரிஷத் கட்சியின்  லுரின்ஜோதி கோகோய், ஜதியா தளக்  கட்சியைச் சேர்ந்த அஜித் குமார் புயான்,  ராய்ஜோர் தளக் கட்சியைச் சேர்ந்த அகில் கோகோய், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மனோரஞ்சன் தாலுக்தார், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த ராகேஷ் ஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முனின் மஹந்தா முதலானவர்களும் இடம் பெற்றிருந்தார்கள். இவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப் பினர்கள் எம்.ஏ.பேபி, பி.வி.ராகவலு,  நிலோத்பால் பாசு மற்றும் ஏ. விஜயராக வன் ஆகியோரைச் சந்தித்தனர். அசாமில் சட்டமன்றத் தொகுதிகளை பாஜக அரசாங்கம் தன்னுடைய அரசியல் ஆதாயங்களின் அடிப்படையில் மறுவரையறை செய்து வருவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பத் திலிருந்தே எதிர்த்து வந்திருக்கிறது. அசாமில் தேர்தல் நடைமுறையில் நேர்மை யை உறுதி செய்திட எதிர்க்கட்சிகள் மேற்கொண்டிருக்கும் ஒன்றுபட்ட முயற்சிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் முழுமையான ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொண்டது.           (ந.நி.)