புதுதில்லி, டிச.1- ஒன்றிய அரசின் நிதிப் பற்றாக்குறை, நடப்பு நிதியாண்டில் ரூ. 15 லட்சத்து 6 ஆயிரம் கோடியாக உயரும் என்று நாட் டின் தலைமை கணக்குக் கட்டுப்பாட்டா ளர் (Controller General of Accounts - CGA) தெரிவித்துள்ளார். 2021 அக்டோபர் மாத நிலவரப்படி நாட்டின் நிதிப் பற்றாக்குறை, ரூ. 5 லட் சத்து 47 ஆயிரம் கோடியைத் தொட்டுள் ளது என்றும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக செவ்வாய்க்கிழ மையன்று வெளியிட்ட அறிக்கையில் சிஜிஏ கூறியிருப்பதாவது: “கடந்த நிதியாண்டில் செலவிற்கும் வருவாய்க்குமான இடைவெளி 119.7 சத விகிதம் வரை அதிகரித்தது. கொரோனா பேரிடரை எதிர்கொள்ள ஒன்றிய அரசின் செலவினம் வெகுவாக அதிகரித்ததே அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும் போது தற்போது நிதிப் பற்றாக்குறை யானது குறிப்பிடத்தக்க அளவில் கட்டுக் குள் வந்துள்ளது. இதற்கு, வருவாய் வசூ லில் காணப்பட்ட கணிசமான முன்னேற் றமே காரணம். தற்போது, ஒன்றிய அரசின் நிதிப் பற்றாக்குறை அக்டோபா் இறுதி நில வரப்படி ரூ. 5 லட்சத்து 47 ஆயிரம் கோடி யைத் தொட்டுள்ளது. இது, நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் பற்றாக் குறை இலக்கில் 36.3 சதவிகிதம் ஆகும். நடப்பு நிதியாண்டில் ஒன்றிய அர சின் நிதிப் பற்றாக்குறை மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 6.8 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, ரூபாய் மதிப்பில் 15 லட்சத்து 6 ஆயிரம் கோடி ஆகும்.” இவ்வாறு சிஜிஏ கூறியுள்ளார்.