states

img

மாண்டவியா, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜூ துறைகள் மாற்றம்!

புதுதில்லி, ஜூன் 10 - பிரதமர் மோடி தலைமையிலான புதிய ஒன்றிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு விவரம் திங்கள்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில், அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஆர். ஜெய்சங்கர் ஆகியோரின் துறைகளில் மாற்றமில்லை. நிதின் கட்காரிக்கும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையே மீண்டும்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் மான்சுக் மாண்டவியாவிடம் இருந்து சுகாதா ரத்துறை பறிக்கப்பட்டு ஜே.பி. நட்டாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாண்டவியாவுக்கு தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர் நலன் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஜோதிராதித்ய சிந்தியாவிடமிருந்த விமானப் போக்குவரத்துத் துறை பறிக்கப்பட்டு, அவருக்கு தகவல் தொழில்நுட்பத்துறை ஒதுக்கப்பட்டு உள்ளது. அதேபோல கிரண்  ரிஜிஜூவிடம் இருந்த உணவு பதப்படுத்துதல் துறை மாற்றப்பட்டு நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் விவகாரத்துறை ஒதுக்கப்பட்டு உள்ளது. ரிஜிஜூவின் துறை, ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வானுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர் எச்.டி. குமாரசாமிக்கு கனரக தொழிற்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  (முழு விபரம்: பக்கம் 2)