states

img

பொருளாதாரம் வலுவாக இருந்தால் விலைவாசி, வேலையின்மை ஏன் உயர்கிறது?

புதுதில்லி, செப்.13- தேசியவாத காங்கிரஸ் கட்சியின்  8-ஆவது தேசிய மாநாடு ஞாயிற்றுக்கிழ மையன்று தில்லியில்  நடைபெற்றது. இந்த மாநாட்டில் கட்சியின் தலைவர் சரத் பவாா் உரையாற்றினார். அப்போது அவர் பேசியிருப்பதாவது: ஒன்றிய அரசின் தவறான மற்றும் பகுத்தறிவற்ற கொள்கைகளால் விலை வாசி இன்று அதிகரித்து இருக்கிறது. அத்துடன் வேலைவாய்ப்பு பிரச்சனை யுடன் நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலைகளும் அதிகரித்து உள்ளன. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது சமையல் எரிவாயு சிலிண்டர்கள் 410 ரூபாய்க்கு கிடைத்தன. ஆனால் இன்று 1000 ரூபாயைக் கடந்து விட்டன. இவ்வாறு விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் இருக்கும்போதுதான், நாட்டின் பொருளாதாரம் வலு வடைந்து இருப்பதாக மோடி அரசு கூறி வருகிறது.

விவசாயிகள் பிரச்சனை, சமூக நல்லிணக்கத்துக்கு ஏற்படுத்தப்படும் இடையூறு, பணவீக்கம், பெண்கள் பாதுகாப்பு, வேலைவாய்ப்பின்மை, எல்லை சாா்ந்த விவகாரங்கள், விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாகப் பயன்படுத்துவது ஆகிய பிரச்சனைகள் மீது தேசிய வாத காங்கிரஸ் கட்சியினா் கவனம் செலுத்த வேண்டும். சோனியா காந்தி, ராகுல் காந்தி, பரூக் அப்துல்லா, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், சஞ்சய் ராவுத், நவாப் மாலிக், அபிஷேக் பானர்ஜி, சத்யேந்திர ஜெயின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலை வர்கள்  ஒன்றிய ஏஜென்சிகளின் விசார ணை வளையத்தில் உள்ளனர். அமலா க்க இயக்குநரகம், சிபிஐ போன்ற மத்திய அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் தற்போதைய ஒன்றிய அரசை நாம் ஜனநாயக ரீதியாக எதிர்கொள்வது சவாலான ஒன்றாகும். எனினும், தில்லி ஆட்சியாளர்களிடம் தேசியவாத காங்கிரஸ் ஒருபோதும் சரண் அடையாது. நாம் போராட்டத்திற்கு தயாராக இருக்க வேண்டும். ஒருமித்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி குறித்து வியூகம் வகுக்க வேண்டும். சாமானியர்களைப் பாதிக்கும் பிரச்ச னைகளில் கூட்டு போராட்டத் திட்டங் களை நடத்த வேண்டும்.  பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுக்க எதிர்க் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். நாட்டின் ஜனநாயக மதிப்பீடுகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. இத்தகைய சூழலில் நாட்டின் இளை ஞர்கள் முன்னோக்கி வர வேண்டும்.  ஒன்றிய அரசின் தவறான செயல் களுக்கு எதிரான போராட்டங்களுக்கு தலைமை தாங்க வேண்டும். இவ்வாறு சரத் பவார் கூறியுள்ளார்.

;