கோஹிமா,டிச.15- நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் ராணுவ சிறப்பு பாதுகாப்புப் படையினர் அப்பாவி மக்கள் 14 பேரை சுட்டுக் கொன்றனர். நாடு முழுவதும் இச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. அந்த மாநில மக்களிடம் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. எல்லைப்பகுதிகளில் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த நிலையில், பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை, ராணுவத்து க்கு ஒத்துழைப்பு கிடையாது என்று அங்குள்ள கொன்யாக் நாகா பழங்குடியின அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், கொன்யாக் கிராம சபைகள்/மாணவர்கள் அல்லது எந்தவொரு சமூகமும் எந்த வித மான வளர்ச்சி தொகுப்பு திட்டங்கள் /உதவிகளை ஏற்கபடக்கூடாது. ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு முகாம் களையும் நடத்தக்கூடாது என்றும் கொன்யாக் பழங்குடியின அமைப்பு தெரிவித்துள்ளது.