states

தக்காளி விலை உயர்வுக்கு பருவமழை தான் காரணம்

புதுதில்லி, ஜூலை 2- தக்காளியின் விலை  உயர்வுக்கு காரணம் பருவமழைதான் என்று ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் புதிய கண்டுபிடிப்பு ஒன்றைக் கூறியுள்ளார்.  புதுதில்லியில் தக்காளியின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை  கோயம்பேடு காய்கறி சந்தையில் ரூ. 90-க்கு விற்ற தக்காளி, தற்போது மேலும் 10 ரூபாய் உயர்ந்து தற்போது ரூ. 100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் திங்கட்கிழமை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.  தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல இடங்களிலும் தக்காளியின் விலை உயர்ந்துள்ளது.  இந்த நிலையில், ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல், தக்காளி விலை உயர்வு குறித்து புதிய கண்டுபிடிப்பு ஒன்றை  ஞாயிறன்று வெளியிட்டுள்ளார். அதில், “தக்காளியின் விலை ஒரு வாரமாக விலை உயர்ந்து காணப்படு கிறது. இதற்குப் பருவமழையும் காரணம். பருவமழை யால் தான் தக்காளியின் விலை அதிகரித்துள்ளது.  இமாச்சலபிரதேசம் மற்றும் கர்நாடகாவில் இருந்து தக்காளி வரத்து வரத்தொடங்கியவுடன் விலை  குறையும். கடந்த ஆண்டு விலையை ஒப்பிட்டால், தற்போது பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை. உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தின் விலை  கட்டுக்குள் உள்ளது. விலைவாசி உயர்வு என்பது “பருவகால நிகழ்வு”. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இந்தியாவை உலகமே பாராட்டியுள்ளது என்றார். பணவீக்கக் கட்டுப்பாட்டால் மக்கள் நிம்மதியாக உள்ளனர்” எனவும் தெரிவித்துள்ளார்.