புதுதில்லி, செப். 3 - பாஜக தேசிய தலைமையகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ‘சனாத னத்தை தூக்கிப் பிடிப்பவர்’ எனக் குறிப் பிட்டு பிரதமர் மோடியின் படம் டுவீட் செய்யப் பட்டுள்ளது. இதையொட்டி, பாஜக இன்னும் சாதி அமைப்பை தூக்கிச் சுமந்து கொண்டிருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பி, பலரும் சமூக வலை தளங்களில் பாஜகவுக்கு தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியா வின் முதல் விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமையன்று நாட்டுக்கு அர்ப் பணித்தார். கொச்சி கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய பாது காப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கடற் படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டது முதல் பேசி முடிக்கும் வரை அனைத்து நிகழ்வுகளையும் ‘பிஜேபி 4 இந்தியா’ என்ற பாஜகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் மற்றும் முகநூல் பக்கங்கள் அடுத்த டுத்து வெளியிட்டன. இந்நிலையில்தான் விமானம் தாங்கி போர்க்கப்பலை அர்ப்பணிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக பாஜக பகிர்ந்தது. ‘சனாதனத்தை தூக்கிப் பிடிப்பவர்’ என்ற அடைமொழியுடன் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு கோவில்கள் மற்றும் மத குருக்களை வணங்குவது போன்று வடிவமைக் கப்பட்ட புகைப்படம்தான் தற்போது சமூக வலை தளங்களில் பிரச்சனைக்கு உள்ளாகி இருக்கிறது. சாதியமைப்பு முறையை உருவாக்கிய தாக கூறப்படும் சனாதன தர்மத்தை பிரதமர் மோடி தூக்கிப் பிடிக்கிறார் என்றால் இன்னும் பாஜக சாதி கட்டமைப்புகளை தாங்கிக் கொண்டு இருக்கிறதா? சமூக வலைதள வாசிகள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் நரேந்திர மோடி ஒட்டு மொத்த நாட்டுக்கும் பிரதமரா? அல்லது இந்து மதத்துக்கும் மட்டும் பிரதமரா? எனவும் அவர்கள் கேள்வி களை எழுப்பி வருகின்றனர்.