states

18ஆவது ஒன்றிய அமைச்சரவையும்... இலாகாக்களும்....

கூட்டணி கட்சிகளின் தயவோடு நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக மோடி ஞாயிறன்று பதவியேற்றார். இந்நிகழ்வில்  30 கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 5 இணையமைச்சர்கள் மற்றும் 36 இணையமைச்சர்கள் மொத்தம் 72 பேர் பதவி ஏற்ற நிலையில், பதவியேற்ற அமைச்சர்களின் இலாகாக்கள் திங்களன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.

1.    பிரதமர் மோடி - பணியாளர்கள், மக்கள் குறைகள், ஓய்வூதியங்கள், அணுசக்தித் துறை, விண்வெளித்துறை, அனைத்து முக்கிய கொள்கை விவகாரங்கள், அமைச்சருக்கும் ஒதுக்கப்படாத அனைத்து இலாகாக்களும்
2.    அமித் ஷா - உள்துறை, கூட்டுறவுத்துறை
3.    ராஜ்நாத் சிங் - பாதுகாப்புத்துறை
4.    நிர்மலா சீதாராமன் - நிதித்துறை, கார்ப்பரேட் விவகாரத்துறை
5.    எஸ்.ஜெய்சங்கர் - வெளியுறவுத்துறை
6.    நிதின் கட்காரி - சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை
7.    தர்மேந்திர பிரதான் - கல்வி, மனிதவள மேம்பாட்டுத்துறை
8.    அஸ்வினி வைஷ்ணவ் - ரயில்வே, மின்னணு மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
9.    ஜே.பி.நட்டா - சுகாதாரம், இரசாயனங்கள் மற்றும் உரங்கள்
10.    மனசுக் மாண்டவியா - இளைஞர் விவகாரங்கள், விளையாட்டு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
11.    கஜேந்திர சிங் ஷெகாவத் - சுற்றுலா, கலாச்சாரம்
12.    மனோகர் லால் கட்டார் - மின்சாரம், வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரம்
13.    ஜிதன் ராம் மஞ்சி - குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை
14.    சிவராஜ் சிங் சவுகான் - வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை, ஊரக வளர்ச்சி
15.    எச்.டி. குமாரசாமி - கனரக தொழில்துறை
16.    கிரண் ரிஜிஜு - நாடாளுமன்ற விவகாரத் துறை, சிறுபான்மை விவகாரம்
17.    பிரகலாத் ஜோஷி - உணவு, நுகர்வோர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை, பொது விநியோகம்
18.    பூபேந்திர யாதவ் - சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை
19.    சி.ஆர்.பாட்டில் - ஜல் சக்தி அமைச்சகம்
20.    ராம் மோகன் நாயுடு - விமானப் போக்குவரத்துத் துறை
21.    பியூஷ் கோயல் - வர்த்தகம் மற்றும் தொழில் துறை
22.    ஜோதிராதித்ய சிந்தியா - தொலைத்தொடர்புத் துறை, வடகிழக்கு பிராந்திய அபிவிருத்தி
23.    சிராக் பாஸ்வான் - உணவு பதப்படுத்துதல்
24.    அன்னபூர்ணா தேவி - பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை
25.    கிரிராஜ் சிங் - ஜவுளித்துறை
26.    ஹர்தீப் சிங் பூரி - பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு 
27.    லாலன் சிங் - மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை, பஞ்சாயத்து ராஜ்
28.    சர்பானந்தா சோனோவால் - துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள்
29.    ஜுவல் ஓரம் - பழங்குடியினர் விவகாரம்
30.    வீரேந்திர குமார் - சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்
31.    கிஷன் ரெட்டி - நிலக்கரி அமைச்சகம், சுரங்கத்துறை
(பிரதமர் மோடியை சேர்த்து 31 கேபினட் அமைச்சர்கள்)

இணை அமைச்சர்கள் - தனி பொறுப்பு

1.    ஜெயந்த் சவுத்ரி - திறன் மேம்பாட்டுத்துறை
2.    இந்திரஜித் சிங் - திட்டம், கலாச்சாரம்
3.    ஜிதேந்திர சிங்-பிரதமர் அலுவலகம்
4.    அர்ஜூன் ராம் மேக்வால் - சட்டம் மற்றும் நீதி
5.    பிரதாப் ராவ் ஜாதவ் - சுகாதாரம், குடும்ப நலம்
இணை அமைச்சர்கள்
•    ஸ்ரீபாத் ஏசோ நாயக்- மின்சாரம், மறுசுழற்சி.
•    பங்கஜ் சவுத்ரி- நிதித்துறை
•    கிருஷண் பால் - கூட்டுறவு
•    ராம்தாஸ் அத்வாலே - சமூக நீதி
•    ராம்நாத் தாக்குர் - வேளாண் மற்றும் விவசாயிகள் நலன்
•    நித்யானந்த் ராய் - உள்துறை
•    அனுப்ரியா படேல் - சுகாதாரம், குடும்ப நலன். ரசாயனம், உரம்
•    சோமண்ணா - ஜல்சக்தி மற்றும் ரயில்வே
•    சந்திரசேகர் பெமசானி - ஊரகவளர்ச்சி, தகவல் தொழில்தொடர்பு
•    எஸ்.பி.சிங் பாகேல் - பஞ்சாயத்துராஜ், மீன்வளம், விலங்குகள் நலம், பால்வளம்
•    ஷோபா கரந்தலாஜே - சிறு,குறு, நடுத்தர மற்றும் தொழிலாளர், வேலைவாய்ப்பு
•    கீர்த்தி வர்தன் சிங் - வனம், சுற்றுச்சூழல், வெளியுறவு
•    பி.எல்.வர்மா - நுகர்வோர் விவகாரம், பொது விநியோகம்
•    எல். முருகன் - தகவல் ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரத்துறை
•    அஜய் தம்டா - இணை அமைச்சர் (போக்குவரத்து - நெஞ்சாலை)
(இணை அமைச்சர்கள் விபரம் - 
இரவு 8 மணி வரை மட்டுமே)

;