states

img

ஆண்ட்ராய்டு 16-இல் மருத்துவ தரவுகள் பாதுகாக்கும் அம்சம்!

ஆண்ட்ராய்டு 16-இல் மருத்துவ தரவுகள் பாதுகாக்கும் அம்சம்!

கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆண்ட்ராய்டு  16-இன் டெவலப்பர்களுக்கான முன்னோட்ட  வடிவில், மருத்துவ பதிவேடு தரவுகளை  (Health Data) பாதுகாப்பான முறையில் அணுகும் வசதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வெளி யாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ராய்டு 16-இன்  டெவலப்பர்களுக்கான முன்னோட்ட வடிவம், முன்ன தாகவே நவம்பர் 20-ஆம் தேதி கூகுள் நிறுவனம் வெளி யிட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தில், சில  பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக, Embedded Photo Picker மற்றும் Health Records Access ஆகிய அம்சங்களில் பாது காப்பு அம்சம்  வழங்கப்பட்டுள்ளன. Embedded Photo  Picker என்பது ஸ்மார்ட்போனில் உள்ள மீடியா ஃபைலில்  அனைத்து ஃபைல்களுக்கு அனுமதி வழங்காமல், குறிப்பிட்ட போட்டோ அல்லது வீடியோவை மட்டும்  அணுகக்கூடிய வகையில், செயலிகளுக்கு அனுமதிக் கிறது. அதேபோல், Health Records Access-இல்  மருத்துவ பதிவேடு தரவுகள் (Health Data) பாதுகாப்பான  முறையில் அணுகும் வகையில் செயலிகளை அனுமதிக் கிறது. 2025 ஜனவரியில் ஆண்ட்ராய்டு 16 பீட்டா பதிப்பு வெளி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கை மெட்டாவுக்கு  ரூ.213 கோடி அபராதம்

வாட்ஸ்அப்பின் 2021-ஆம் ஆண்டின் தனியுரிமை கொள்கை அப்டேட் விவகாரத்தில், இந்திய போட்டி ஆணையம் (Competition Commission of India) மெட்டா நிறுவனத்திற்கு ரூ.213 கோடி அபராதம் விதித்துள்ளது. வாட்ஸ்அப்பின் 2021-ஆம் ஆண்டின் தனியுரிமை கொள்கையின் அப்டேட் கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் நடைமுறைக்கு வந்தது. இதில் வாட்ஸ்அப் பயனர்களின் தரவு களை, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற மெட்டாவுக்குச் சொந்தமான பிற தளங்களுடன் பகிர அனு மதிக்குமாறு பயனர்களுக்கு நோட்டிஃபிகேஷன் (notification) அனுப்பப்பட்டது. இதன் மூலம் பயனர் ஒருவர்  தனது வாட்ஸ்அப் நம்பரில் இருந்து ஒரு பிசினஸ் அக்கவுண்ட்களுக்கு தொடர்பு கொண்டால், அந்த பிசினஸ் தொடர்பான விளம்பரங்களை பயனரின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளில் காண்பிக்கப்படும். இது குறித்த  புகாரை விசாரித்த இந்திய போட்டி ஆணையம், மெட்டா நிறு வனத்திற்கு ரூ.213 கோடி அபராதம் விதித்துள்ளது. மேலும்,  3 மாதத்துக்குள் இதனைச் சரி செய்ய மெட்டா நிறுவனத் திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் டிரான்ஸ்கிரிப்ட்களை பயன்படுத்துவது எப்படி?

வாய்ஸ் மெசேஜ் டிரான்ஸ்கிரிப்டுகள் (Voice message transcripts) என்பது ஆடியோ மெ சேஜ்களை உரையாக மாற்றுவதாகும். சில நாடுகளில் உள்ள வாட்ஸ்அப் பயனர்களுக்கு இந்த அம்சம் அண்மை யில் வழங்கப்பட்டுள்ளது. சில வாரங்களில் இந்தியாவில்  வெளியாக இருக்கிறது. இதனை எப்படி பயன்படுத்துவது? 1) வாட்ஸ்அப் செயலியில் உள்ள Settings-க்கு சென்று  Chat என்ற ஆப்ஷனை தேர்வு செய்து Voice Message Transcripts என்பதை ON செய்ய வேண்டும். 2) இதில் ஆடியோ மெசேஜ்களை உரையாக மாற்றும்  மொழியையும் தேர்வு செய்யலாம். 3) இதை அடுத்து சாட்டில் உள்ள வாய்ஸ் மெசேஜை கிளிக் செய்து ‘Transcribe’ என்பதை தேர்வு  செய்தால் மெசேஜை Text வடிவில் பெற்றுக்கொள்ளலாம்.