காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு
புதுதில்லி, டிச.2- மோடியின் திட்டப்படியே, காங்கி ரசை பலவீனப்படுத்தும் வேலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் கட்சி யின் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றம் சாட்டியுள்ளார். “இந்த நாடே மம்தா.. மம்தா.. என்று கூறுவதாக தனக்குத்தானே மம்தா கருதிக் கொள்வது பைத்தியக்காரத் தனம்” என்றும் அவர் கடுமையாக சாடி யுள்ளார். நரேந்திர மோடி அரசுக்கு எதிராக வும், பாஜகவின் இந்துத்துவா அரசிய லுக்கு எதிராகவும் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து போராடி வரும் வேளையில், அவர்களைத் துண்டா டும் திட்டத்தை மம்தா கையில் எடுத்துள் ளார். குறிப்பாக, பாஜகவுக்கு பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கி ரசை திரிபுரா, மேகாலயா, அசாம் உள் ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும், கோவாவிலும் பலவீனப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளார்.
இந்த மாநிலங்களிலுள்ள காங்கிரசின் முன்னாள் முதல்வர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களை கொத்துக் கொத்தாக திரிணாமுல் காங்கிரசிற்கு இழுத்துக் கொண்டிருக்கிறார். தன்னைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திக் கொள்ளும் வகை யில், மாநிலக் கட்சிகளின் தலைவர் களையும் சந்தித்து வருகிறார். அந்த வகையில், கோவாவைத் தொடர்ந்து தற்போது மகாராஷ்டிராவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மம்தா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர்கள் சஞ்சய் ராவத், ஆதித்ய தாக்கரே ஆகியோ ரைச் சந்தித்து, 2024 நாடாளுமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனையை மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின்போது செய்தி யாளர்களையும் மம்தா சந்தித்தார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு சரத் பவார் தலைமை வகிப்பாரா? என அந்த சந் திப்பின்போது செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, “ஐக்கிய முற்போக்குக் கூட்டணியா? அப்படி ஒன்று இருக்கி றதா என்ன? அது என்ன செய்து கொண் டிருக்கிறது?” என்று எதிர்க் கேள்வி எழுப்பியதுடன், “அரசியலில் தொட ர்ச்சியாக செயல்படுவது அவசியம்,
தொடர்ந்து வெளிநாட்டில் இருந்தால் என்ன செய்ய முடியும்?” என்று காங்கி ரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் மம்தா கிண்டலடித்தார். இது தற்போது காங்கிரஸ் தலை வர்களை கொந்தளிக்க வைத்துள் ளது. “ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்றால் என்னவென்றே மம்தாவுக்கு தெரியாதா? அந்த கூட்டணியில் 2012-இல் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த வர்கள் 6 பேர் அமைச்சர்கள் இருந்தார் களே.. அதுவும் தெரியாதா?” என்று காங்கிரஸ் மக்களவைக்குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சாடி யுள்ளார். மேலும், “ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசைக் கவிழ்க்க, அப் போது தனது ஆதரவை வாபஸ் பெற்ற வர்தான் மம்தா. ஆனால் அன்று அவ ரது சூழ்ச்சி பலிக்கவில்லை” என்று சுட்டிக்காட்டியுள்ள ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “ஒட்டுமொத்த இந்தியாவும் ஏதோ மம்தா.. மம்தா.. என்று கூக்குர லிடுவது போல மம்தா நினைத்துக் கொண்டிருக்கிறார்..
அது பைத்தி யக்காரத்தனம். மேற்கு வங்கம் மட் டுமே இந்தியா கிடையாது. அதே போல இந்தியா என்பதும் மேற்கு வங்கம் கிடையாது. ஆனால் பிரதமர் மோடியின் ஆதரவுடன் மம்தா, காங்கி ரசை பலவீனப்படுத்த முயற்சிக்கி றார். மேற்குவங்க சட்டமன்ற தேர்த லில் மம்தா அரங்கேற்றிய நாடகங்கள் தற்போது மெல்ல மெல்ல அம்ப லத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன” என்றும் குற்றச்சாட்டுக்களை அடுக்கி யுள்ளார். “நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சி இடம்பெறாத ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, ஆன்மா இல்லாத உடலாகவே இருக்கும்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியுள்ளார். “எதிர்க் கட்சிகளின் ஒற்றுமையைக் காட்ட வேண்டிய நேரம் இது!” என்றும் குறிப் பிட்டுள்ளார். “இந்திய அரசியலின் யதார்த்தம் அனைவருக்கும் தெரியும். காங்கிரஸ் இல்லாமல் பாஜகவை வீழ்த்த முடியும் என்பது வெறும் கனவுதான்!” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் பதிலடி கொடுத்துள் ளார்.
“பாஜகவுக்கும் ஒன்றிய அரசுக்கும் எதிராக காங்கிரஸ் எப்படி போராடிக் கொண்டிருக்கிறது என்பதை நாடு நன்கு அறியும். பாஜக-வை எதிர்த்து ஒரே ஒரு கட்சியால் போராட முடி யாது. ராகுல் காந்தியை மம்தா விமர்சிப்பது என்பது தனிப்பட்ட ஆதா யங்களுக்காக (மருமகன் அபிஷேக் பானர்ஜியை அமலாக்கத்துறை வழக்குகளிலிருந்து காப்பாற்ற) மட்டும்தான் என்று மகாராஷ்டிரா அமைச்சர் பாலாசாகேப் தோரட் விமர் சித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் தலை வர் சரத் பவாரும், “காங்கிரஸ் மட்டு மல்ல.. எந்த ஒரு எதிர்க்கட்சியையும் நாங்கள் விட்டுவிடுவதாக இல்லை.. அனைவரையும் இணைத்தே பாஜக வை வீழ்த்த முடியும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.