புதுதில்லி, ஜூலை 6 - பழங்குடியினரைப் போல மதச் சிறுபான்மை யினருக்கும் இந்தச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (AIMPLB) வலியுறுத்தியுள்ளது. பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) மீதான கருத்துக்களை ஜூன் 14 துவங்கி ஜூலை 14 வரை ஒருமாதத்திற்குள் தெரிவிக்குமாறு, 22-ஆவது சட்ட ஆணையம் அண்மையில் அறி விக்கை வெளியிட்டிருந்தது. அதனடிப்படையிலேயே, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் ஆட்சே பணைகளை, ஜூலை 5 அன்று சட்ட ஆணை யத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. அதில், முஸ்லிம்கள், பழங்குடியினர் மற்றும் மத சிறு பான்மையினரை, பொது சிவில் சட்ட வரம்பி லிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. “சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியின சமூகங்கள் அவர்களது சொந்த சட்டங்களை பின்பற்ற அனுமதிப்பதன் மூலம் நமது நாட்டின் பன்முகத்தன்மையை பேணும் பட்சத்தில், தேசிய ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் சகோதரத்துவம் சிறப்பாக பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படும். குறிப்பாக, முஸ்லிம்களின் தனிப்பட்ட உறவு கள், அவர்களின் தனிப்பட்ட சட்டங்களால் வழி நடத்தப்படுகின்றன, அவை நேரடியாக புனித குர்ஆன் மற்றும் இஸ்லாமிய சட்டங்களிலி ருந்து பெறப்பட்டவையாகும். அத்துடன், முஸ்லிம் தனி நபர் சட்டத்தின் அம்சங்கள் அவர் களின் மத அடையாளத்துடன் இணைக்கப் பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் இந்த அடையாளத்தை இழக்க ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
மேலும், சட்ட ஆணையம் குறுகிய காலத்திற் குள், என்ன செய்யப் போகிறது என்பது குறித்து எந்த திட்டவட்டமும் இல்லாமல், அடுத்தடுத்து சட்ட ஆணையம் (21-ஆவது சட்ட ஆணையம் ஏற்கெனவே கருத்துக்கேட்பு நடத்தி முடித்து, பொது சிவில் சட்டம் இந்தியாவிற்கு சரி வராது என்று அறிக்கை தாக்கல் செய்து விட்டது) மீண்டும் பொதுமக்களின் கருத்தைத் தேடுவது ஆச்சரியமாக இருக்கிறது. தற்போதுள்ள வரைவு சிவில் சட்டங்களை நாங்கள் ஆய்வு செய்ததன் மூலம், தற்போ துள்ள பொது- சீரான குடும்பச் சட்டங்கள் உண்மையிலேயே ஒரே மாதிரியானவை அல்ல என்பதோடு தற்போதுள்ள சமூக அடிப்ப டையிலான சட்டங்கள் கூட ஒரே மாதிரியானவை அல்ல என்ற முடிவுக்கே வந்துள்ளோம்” என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, தத் தெடுப்பு உள்ளிட்ட விஷயங்களில், நாட்டில் உள்ள பல்வேறு மதத்தினர் தங்க ளுக்கென தனிப்பட்ட சட்டங்களைப் பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில், மத அடிப்படை யில் அல்லாமல், அனைத்து குடிமக்களுக்கும் ஒரே விதமான சட்டத்தை கொண்டு வரப்போகி றோம் என்று ஒன்றிய பாஜக அரசு அறிவித்து இருந்தாலும், நடைமுறையில் இஸ்லாமியர் களை குறிவைத்தே, பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதங்களை துவங்கியுள்ளது. இந்தியா போன்ற பல்வேறு மொழிகள், இனம், சாதி, மதம், பண்பாடு, பழக்க வழக்கங் களைக் கொண்ட நாட்டிற்கு ஒரேமாதிரியான சட்டம் என்பது சரிவராது; மாறாக, அது இந்தி யாவின் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தாக முடியும் என்று 21-ஆவது சட்ட ஆணையம் ஏற்கெனவே பரிந்துரை அளித்து விட்டது. எனினும், 2024 தேர்தலையொட்டி, மத ரீதியான விவகா ரத்தை கிளப்பிவிட்டு, பெரும்பான்மை வாக்கு களை அறுவடை செய்வதற்கான திட்டமாக பொது சிவில் சட்டத்தை பாஜக கையில் எடுத்துள்ளது. இந்நிலையில், இஸ்லாமியர்க்கு மட்டு மன்றி, சீக்கியர், ஜெயின், இந்து மதத்திற்கு உள்ளேயே பல்வேறு வழிபாட்டு முறைகளைக் கொண்டிருக்கும் பிரிவினர் ஆகிய அனை வருக்குமே பொது சிவில் சட்டம் எதிரானது என்று தற்போது நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது.