states

சிபிசிஐடி விசாரணையை துரிதப்படுத்துக!!

முதலமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

சென்னை, செப்.24- கனியாமூர் தனியார் பள்ளியை தமிழக அரசே ஏற்று நடத்திட வேண்டுமென்றும், பள்ளி யை புனரமைக்க மாவட்ட ஆட்சியர் அளித்த  அனுமதியை திரும்பப்பெற வேண்டுமென் றும், சிபிசிஐடி விசாரணையை துரிதப்படுத்திட வேண்டுமென்று வலியுறுத்தி மார்கசிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பால கிருஷ்ணன் செப்டம்பர் 24அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு  கடிதம் அனுப்பியுள்ளார்.  அவர் அனுப்பிய கடிதம் வருமாறு: கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனி யார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13 ஆம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறை  யில் உயிரிழந்தார். மாணவியின் மரணத்தில்  பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சந்தேகம் எழுப்பினர். மாணவியின் மரணத் திற்கு நீதி கேட்டு பல கட்ட போராட்டங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தங்க ளது உத்தரவின் பேரில் வழக்கு சிபிசிஐடி விசா ரணைக்கு மாற்றப்பட்டு பள்ளி தாளாளர், ஆசி ரியை உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகி றது. கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர்,  ஆசிரியை உள்ளிட்ட 5 பேரும் சென்னை உயர்  நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்  ளனர்.  மாணவியின் மரணம் தொடர்பான விசா ரணை தொடர்ந்து வரும் நிலையில், இது குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற நக்கீரன் பத்தி ரிகையாளர்கள் பிரகாஷ், அஜித்குமார் ஆகி யோர் பள்ளி நிர்வாகத்தினரால் தலைவாசல் வரை விரட்டிச் சென்று கொடூரமாக தாக்கப்பட் டுள்ளனர். கடுமையான காயங்களுடன் மேல்  சிகிச்சைக்காக சென்னை, ஓமந்தூரார் அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுசம்பந்த மாக காவல்துறையினர் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜசேகர் உள்ளிட்டு 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவ மானது பள்ளி நிர்வாகத்தினர் காவல்துறை யின் விசாரணையையும், பத்திரிகையாளர் களின் விசாரணையையும் நீர்த்துப்போகச் செய்ய எத்தகைய மோசமான காரியங்களிலும் ஈடுபடுவார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

தடயங்கள், ஆதாரங்களை அழிக்க  பள்ளியில் புனரமைப்புப்பணி

இந்நிலையில் தற்போது மாவட்ட ஆட்சிய ரின் அனுமதியின் பேரில் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பள்ளியை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது.  இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடைபெற்று வரும் சூழலில் பள்ளி நிர்வாகம் புனரமைப்பு பணி மேற்கொள்வதால் ஸ்ரீமதி மரணத்திற்கான தடயங்களையும், ஆதாரங்க ளையும், அழிப்பதற்கும், உண்மைகளை மறைப்பதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்  ளன. சிபிசிஐடி புலன் விசாரணையை நீர்த்துப்  போகச் செய்யவும், ஆதாரங்களை கலைப்ப தற்கான வாய்ப்புகளையும் உருவாக்கி விடும்.  மேலும் அடியாட்களை கொண்டு சம்பவத்தை அறிந்தவர்களை மிரட்டுவதற்கும் வாய்ப்பு ஏற்படும்.  ஸ்ரீமதியின் மரணம் மற்றும் ஏற்கனவே அப்பள்ளியில் நடந்த மர்ம மரணங்கள் காரண மாகவும், பள்ளி நிர்வாகத்தின் மோசமான அரா ஜக நடவடிக்கையினாலும் இப்பள்ளியில் பயின்ற மாணவ - மாணவிகள் மற்றும் பெற் றோர்கள் அச்ச உணர்விலேயே உள்ளனர். இத னால் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை தொடர்ந்து கொண்டே உள்ளது.

 தனது மகளை பறிகொடுத்துவிட்டு கண்ணீ ரும், கம்பலையுமாக ஸ்ரீமதியின் பெற்றோர் நிர்க்கதியாக உள்ளனர். தனது மகள் மர ணத்திற்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை யில் உள்ளனர். இந்நிலையில் ஸ்ரீமதி மரணம் குறித்து அமைக்கப்பட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசா ரின் விசாரணை துரிதமாக நடைபெறுவதை உறுதி செய்திட வேண்டுகிறோம்.  எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இப்பிரச்சனையில் தலையிட்டு கீழ்க்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். 1. கனியாமூர், சக்தி மெட்ரிகுலேசன் பள் ளியை குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்காவது தனி அதிகாரியை நியமித்து தமிழக அரசே ஏற்று நடத்திட வேண்டும். இவ்வாறு செய்  வதே பள்ளி மாணவ, மாணவிகள் மனஉளைச்ச லின்றி கல்வியில் கவனம் செலுத்திட இய லும். 2.    மாணவர்களின் கல்வி நலனை கவ னத்தில் கொண்டு சிபிசிஐடி விசாரணையை விரைவாக முடித்து அதன் பின்னர் பள்ளி புனர மைப்பு பணிகளை அரசு அதிகாரிகள் மேற் பார்வையில் மேற்கொண்டு பள்ளியைத் திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும். பள்ளி நிர்வாகமே புனரமைப்பு பணி களை மேற்கொள்வதற்கு மாவட்ட ஆட்சியர் அளித்துள்ள அனுமதியை திரும்ப பெற வேண்டும்.  3. ஸ்ரீமதி மரணம் குறித்து அமைக்கப்  பட்ட சிபிசிஐடி போலீசார் முறையாக விசா ரணை நடத்தி விரைவில் குற்றப்பத்திரிகை யினை தாக்கல் செய்ய வேண்டும்.  4. அப்பாவிகளை கைது செய்வது, குண்டர்  சட்டத்தில் வழக்கு தொடுப்பது, சிறையில் அடைப்பது போன்ற போலீசாரின் நடவடிக்கை களை முற்றிலும் கைவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;