states

கலாசேத்ராவில் ஒன்றுமே நடக்காதது போல ஒன்றிய அமைச்சர் பதிலளிக்கிறார்!

சு. வெங்கடேசன் எம்.பி. விமர்சனம்

புதுதில்லி, ஜூலை 25- பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான  உள்புகார் குழு விவகாரத்தில்  சென்னை கலா சேத்ராவில் ஒன்றுமே நடக்காதது போல, முழுப்  பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் விதத்தில் ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் பதிலளிக்கிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.  இதுகுறித்து சு. வெங்கடேசன் எம்.பி. வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: “கலாசேத்ராவில் இருந்த பாலியல் துன்  புறுத்தல்களுக்கு எதிரான ‘உள் புகார் குழு’  பற்றிய கேள்வி ஒன்றை (எண் 462/ 24.07.2023) நாடாளுமன்றத்தில் எழுப்பியிருந்தேன். ‘கலாசேத்ரா உள் புகார் குழு பற்றிய சர்ச்சை  ஏதும் இருந்ததா? அதன் மீது என்ன நட வடிக்கை? உள் புகார் குழுக்கள் செயல்பாடு பற்றி கண்காணிக்க என்ன முறைமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது?’ என்று நான் எழுப்பிய கேள்விகளுக்கு ஒன்றிய கலாச்சாரத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி  அளித்துள்ள பதில்  அதிர்ச்சி அளிக்கிறது.  சர்ச்சை உள்ளதா என்ற முதல் கேள்விக்கு  ‘இல்லை’ என்று பதில் அளித்துள்ளார்.

ஆனால்  இதுதொடர்பான சர்ச்சை ஊடகங்களில் பெரிய  அளவுக்கு நடந்தது. கலாசேத்ரா இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் அவர்களே உள் புகார்  குழு உறுப்பினராகவும் இருந்தார். குழு உறுப்பி னரை நியமிக்கிற இடத்தில் உள்ளவரே உறுப்பினராக தன்னைத் தானே நியமித்துக் கொள்ள முடியுமா? என்ற கேள்விகள் எல்லாம்  எழுந்தது. இதுதொடர்பான வழக்கும் (ரிட் மனு  11764 / 2023) சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து, அதில் இடைக்கால ஆணைகள் எல் லாம் பிறப்பிக்கப்பட்ட செய்திகள் வந்தன.  ஆனால் ஒன்றுமே நடக்காதது போல  அமைச்சர் பதில் அமைவது நாடாளுமன்றத் திற்கு தகவல்களை மறைப்பதாகும்.  அதை விடுத்து, ஏப்ரல் 2023-இல் உள் புகார்  குழு ஒன்று அமைக்கப்பட்டதாக பதிலில் தெரி வித்துள்ளார். அதற்கு முன்பு எந்த குழு இருந்  தது? அதன் உள்ளடக்கம் என்ன? இது பற்றி யெல்லாம் அமைச்சர் பதிலில் ஒன்றுமே இல்லை. ஆகவே, மீறல்கள் குறித்த நட வடிக்கை பற்றிய கேள்விக்கு தனியாக பதில் அளிக்கவும் இல்லை.  ஆனால் இதுபோன்ற சட்ட ரீதியான முறை மைகளின் செயலாக்கம் கலாச்சாரத் துறை யால் கண்காணிக்கப்படுவதாகவும் தெரி வித்துள்ளார். ஆனால், தகவல்களிலேயே இவ்வளவு இடைவெளிகள்!  கலாசேத்ராவை காப்பாற்றுவதில் காண் பிக்கிற அக்கறையில் கொஞ்சமாவது நாடாளு மன்ற நெறிமுறைகளை காப்பாற்றுவதில் காண்பியுங்கள்.” இவ்வாறு சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.