புதுதில்லி, செப்.22- இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product - GDP) மதிப்பு நடப்பு நிதியாண்டில் 7 சத விகிதமாக குறையும் என ஆசிய வளர்ச்சி வங்கி (Aasian Development Bank - ADB) மதிப்பிட்டுள்ளது. முன்னதாக நடப்பு 2022-23 நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவிகிதமாக இருக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி கணித்திருந்தது. தற்போது இந்தியாவில் நிலவும் பணவீக்கம், நிதி நெருக்கடி காரணமாக அந்த வளர்ச்சிக் கணிப்பை 7 சதவிகிதமாக குறைத்துள்ளது. “2022-23 நிதியாண்டின் முதல் காலா ண்டில், இந்தியாவின் பொருளாதாரம் 13.5 சதவிகித வளா்ச்சி கண்டது. இது சேவைத் துறையின் உறுதியான வளா்ச்சியைப் பதிவு செய்தது. இருப்பினும், விலை அழுத்த மானது உள்நாட்டு நுகா்வின் மீது கடுமை யான தாக்கத்தை ஏற்படுத்தியதால், மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.2 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாக குறையும் என எதிா்பாா்க்கப் படுகிறது. இதேபோல சீனப் பொருளாதாரம் 5 சத விகிதத்திற்கும் மேலாக வளா்ச்சி காணும் என ஏற்கெனவே கணிக்கப்பட்டிருந்த நிலை யில், தற்போது அதுவும் 3.3 சதவிகிதமாக குறைத்து மதிப்பிடப்படுகிறது. கொரோனா பொதுமுடக்கம் உள்ளிட்ட காரணங்களா லேயே சீனப் பொருளாதார வளா்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது” என ஆசிய வளா்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.