புதுதில்லி, டிச.13- பிரான்ஸ் பொருளாதார நிபுணர் தாமஸ் பிக்கெட்டி உட்பட உல கின் பல்வேறு பொருளாதார வல்லு நர்கள் இணைந்து தயாரித்திருந்த ‘உலக சமத்துவமின்மை அறிக்கை (World Inequality Report - 2022)’ கடந்த வாரம் வெளியானது. இந்தியாவில் ஏழைகள் எண் ணிக்கை அதிகரித்து வருவதையும், மக்களிடையே சமத்துவமின்மை நீடிப்பதையும் அந்த அறிக்கை விவ ரமாக குறிப்பிட்டிருந்தது. நாட்டின் ஒட்டுமொத்த வருமா னத்தில் 22 சதவிகிதத்தை வெறும் ஒரு சதவிகித மக்கள் பகிர்ந்து கொள்ள, 10 சதவிகித மக்கள் 57 சதவிகித வரு மானத்தையும், 50 சதவிகிதமான மக் கள் வெறும் 13 சதவிகித வருமா னத்தையும் மட்டுமே பகிர்ந்து கொள் கின்றனர் என்று கூறியிருந்தது. இந்நிலையில், ஆண்கள் - பெண் களுக்கு இடையிலான வருவாயி லும் பாலின அசமத்துவம் நிலவு வதை அந்த அறிக்கை விளக்கி யுள்ளது.
உலகம் முழுவதுமே 50 சத விகிதத்திற்கும் குறைவாகவே பெண்களின் வருவாய் விகிதம் உள்ளது என்றாலும், இந்தியாவில் தொழிலாளர் வருவாயில் ஆண்க ளுக்கு 82 சதவிகிதம் கிடைக்கும் போது பெண்களுக்கு அது 18 சத விகிதம் என்ற அளவில் இருப்பது மிகக் குறைவானதாகும். இது, கடந்த 2019ஆம் ஆண்டின் ஆசிய சரா சரியான 27 சதவிகிதம் என்ற அளவை விடவும் குறைவு ஆகும். இந்தியா வில் 18.3 சதவிகிதம், அண்டை நாடு களான பூடானில் 17.5 சதவிகிதம், வங்கதேசத்தில் 16.9 சதவிகிதம், பாகிஸ்தானில் 7.4 சதவிகிதம், ஆப் கானிஸ்தானில் 4.2 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது. அதேநேரம் நேபாளம் (23.2 சத விகிதம்), இலங்கை (23.3 சதவிகி தம்), சீனா (33.4 சதவிகிதம்) ஆகிய நாடுகள் இந்தியாவைக் காட்டிலும் முன்னணியில் உள்ளன. உலக அளவில் பெண்களின் வரு வாய் விகிதம் அதிகம் (45 சதவிகி தம்) கொண்டதாக மோல்டாவா உள் ளது. ஏமன் நாட்டில் மிகமிகக் குறை வாக 1 சதவிகிதமாகவும் உள்ளது. வேலை செய்வதில் பெண்களின் பங்கு 1990ஆம் ஆண்டில் 30 சத விகிதமாகவும், 2021-இல் 34 சத விகிதமாகவும் அதிகரித்துள்ளது. எனினும், பெண்களின் உழைப்புக் கான வருவாய் பங்கு என்பது இன் னும் மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது என்று அறிக்கை தெரிவித்துள்ளது.