states

img

நாடு முழுவதும் தக்காளி விலை கடும் உயர்வு!

புதுதில்லி, டிச.7- தக்காளி விலை நாடு முழு வதும் கடுமையான உயர்வைச் சந் தித்து வருகிறது. ஒரு கிலோ தக்காளி சராசரியாக 60 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், கேரளா, அந்தமான் நிகோபர் தீவுகளில் 125 ரூபாய் முதல் அதிகபட்சமாக 140 ரூபாய் வரை தக்காளி விலை உயர்ந்துள்ளது. நாட்டின் பெரும்பாலான சில் லரை விற்பனைச் சந்தைகளில் செப்டம்பர் இறுதியில் தக்காளி விலை உயர்வது வழக்கமானது தான் என்றாலும், இந்தாண்டு தொடர் மழை காரணமாக விலை உயர்வு முன்னெப்போதும் இல்லாத அதி கரிப்பைக் கண்டுள்ளது. வடமாநிலங்களில் தக்காளியின் சில்லரை விலை ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் முதல் 83 ரூபாய் வரை யிலும், மேற்கு மாநிலங்களில் கிலோ 30 ரூபாய் முதல் 85 ரூபாய் வரை யிலும் கிழக்கு மாநிலங்களில் கிலோ 39 ரூபாய் முதல் 80 ரூபாய் அள விற்கும் உயர்ந்துள்ளது.

பெருநகரங்களை எடுத்துக் கொண்டால், மும்பையில் ஒரு கிலோ தக்காளி 55 ரூபாய்க்கும், தில்லியில் 56 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் கிலோ 78 ரூபாய்க்கும், சென்னையில் கிலோ 83 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  அதிகபட்சமாக அந்தமானின் மாயாபண்டரில் ஒரு கிலோ தக்காளி 140 ரூபாயாகவும், நிகோபார் தீவு களில் உள்ள போர்ட் பிளேயரில் ஒரு கிலோ 127 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த திங்களன்று இராமநாதபுரத்தில் தக்காளி கிலோ 102 ரூபாய்க்கும், நெல்லையில் 92 ரூபாய்க்கும், கடலூரில் 87 ரூபாய்க் கும், சென்னையில் 83 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. கேரள மாநிலம் திருவனந்த புரத்தில் கிலோ 125 ரூபாய்க்கும், பாலக்காடு மற்றும் வயநாட்டில் கிலோ 105 ரூபாய்க்கும் விற்பனை யானது. கர்நாடக மாநிலம் மங்க ளூரு மற்றும் துமகுருவில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கும், தார்வார் டில் 75 ரூபாய்க்கும், மைசூருவில் 74 ரூபாய்க்கும் பெங்களூருவில் 57 ரூபாய்க்கும் விற்பனையானது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டி னத்தில் கிலோ 77 ரூபாய்க்கு விற் பனை செய்யப்பட்டது. இதுவே திருப்பதியில் ஒரு கிலோ 72 ரூபாய்க்கும், தெலுங்கானா மாநி லம் வாரங்கலில் கிலோ 85 ரூபாய்க் கும் விற்பனையானது. புதுச்சேரி யில் தக்காளியின் சில்லரை விலை 85 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

;