தங்களை எதிர்ப் போரை, பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்துவது பாஜகவின் வழக்கம். அந்த வகையில், உ.பி. தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பாகிஸ்தானுக்கு ஆதரவானவர். ஜின்னாவின் ஆதரவாளர் என்று பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறி யுள்ளார். அதேபோல, “நான் முதல்வ ராக இருந்தபோது சித்துவை மீண்டும் அமைச்சரவையில் சேர்த்து கொள்ளும் படி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எனக்கு தூது அனுப்பினார்” என்று பாஜக வுடன் தற்போது கூட்டணி அமைத்துள்ள பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவர் அம் ரீந்தர் சிங்கும் புதியகதை கூறியுள்ளார்.