புதுதில்லி, டிச. 1- காஷ்மீரில் இயல்பு நிலை வர வேண்டுமானால், சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று பரூக் அப்துல்லா எம்.பி., வலியுறுத்தினார். ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டுக்கட்சி தலை வரும் நாடாளுமன்ற உறுப்பி னருமான பரூக் அப்துல்லா குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக செவ்வா யன்று நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்தார். அப்போது, அவரிடம் காஷ்மீரில் பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பாக வும், காஷ்மீர் நிலவரம் தொடர் பாகவும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பரூக் அப்துல்லா, “காஷ்மீரில் அமைதி திரும்பவேண்டு மானால் சிறப்பு அந்தஸ்து சட்டம் 370-ஐ மீண்டும் கொண்டுவர வேண்டும்” என்றார். முன்னதாக, பரூக் அப்துல்லாவின் மகனும், காஷ்மீர் முன்னாள் முத லமைச்சருமான உமர் அப் துல்லா காஷ்மீரின் கிஷ்ட்வர் மாவட்டத்தில் ஞாயிறன்று நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி யில் பேசுகையில், “எங்கள் ஆட்சிக் காலத்தில் பயங்கர வாதம் துடைத்து எறியப்பட்ட இடங்களில் மீண்டும் பயங்கரவாதம் வளருகிறது. இந்த பயங்கரவாதிகள் வெளியில் இருந்துவர வில்லை. கோபம் மற்றும் பிற காரணங்களால் ஆயு தங்களை எடுக்கத் தயாராக உள்ள காஷ்மீர் இளைஞர் களே பயங்கரவாதிகளாக வருகின்றனர்’’ என்றார்.