புதுதில்லி, டிச.1- பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரி கள் மூலம் ஒன்றிய அரசுக்கான வரு வாய் இரண்டு மடங்கிற்கு மேலாக அதிகரித்துள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவை யில் கேள்வி நேரத்தின்போது அளித்த பதிலில், ஒன்றிய அரசின் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி இதுதொடர்பாக கூறியிருப்பதாவது: பெட்ரோல் - டீசல் மீது கலால் வரி விதிப்பதால் ஒன்றிய அரசுக்கு 2020 - 21 நிதியாண்டில் 3 லட்சத்து 72 ஆயி ரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத் துள்ளது. கடந்த 2019 - 20 நிதியாண் டில் 1 லட்சத்து 78 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கே வருவாய் கிடைத்த நிலை யில், அது தற்போது இரண்டு மடங்கிற் கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்த வருவாய் அதிகரிப்புக்கு பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரி உயர்வுகளே காரணம்.
கடந்த 2019-இல் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 19 ரூபாய் 98 காசுகளாகவும், டீசல் மீதான கலால் வரி 15 ரூபாய் 83 காசுகளாகவும் இருந் தது. இதுவே 2020-ஆம் ஆண்டில் பெட் ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 32 ரூபாய் 98 காசுகளாகவும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 31 ரூபாய் 83 காசுகளாகவும் உயர்த்தப்பட்டது. எனினும் நவம்பர் மாதத்தில், பெட்ரோல் மீதான கலால் வரி லிட்ட ருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு 10 ரூபா யும் குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி வசூலில், மாநிலங்களுக்கு 2020 - 21 நிதியாண்டில் 19 ஆயிரத்து 972 கோடி ரூபாய் பகிர்ந்த ளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.