புதுதில்லி, ஜூலை 6- பொது சிவில் சட்டம் குறித்தான விவாதம் சமீபத்தில் அதிகளவில் நடந்து வருகிறது.இந்து ராஷ்டிரா வின் ஒரு பகுதியே பொது சிவில் சட்டம் என பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் விமர்சித்துள்ளார். பொது சிவில் சட்டத்தை அமல் படுத்துவதில் இனியும் தாமதம் கூடாது என்ற செய்தியைப் படித்தேன். இத்தகைய முட்டாள்தனமான யோசனை எங்கிருந்து வந்தது என அமர்த்தியா சென் கேள்வி எழுப்பியுள்ளார். 2024 மக்களவைத் தேர்தலுக்கு குறுகிய காலமே இருக்கும் நிலை யில், பொது சிவில் சட்டத்தை விரை ந்து அமல்படுத்தி தேர்தல் ஆதாயம் பெறும் உள்நோக்கத்துடன்,அதன் மீதான கருத்துக் கேட்புக் கூட்டங் களை அவசர அவசரமாக நடத்தி வருகிறது ஒன்றிய பாஜக அரசு. இந்நிலையில், பொருளாதார அறிஞரும் நோபல் பரிசு பெற்றவரு மான அமர்த்தியா சென்கூறுகையில், “வெவ்வேறு மதங்கள், அவற்றுக் கென தனித்தனி பழக்க வழக்கங் கள் சட்டங்கள் என நமக்குள் வேறு பாடுகள் உள்ளன. அந்த வேறுபாடு களை நீக்கி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால் பொது சிவில் சட்டம் தேவை என்று செய்தித் தாள்களில் படித்தேன். இத்தகைய முட்டாள்தனமான யோசனை எங்கிருந்து வந்தது” என அவர் கேள்வி எழுப்பினார்.
இந்து ராஷ்டிராவுடன் பொது சிவில் சட்டத்திற்கு தொடர்பு உள்ளதா? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “நிச்சயமாக தொடர்பு இருக்கிறது, இந்து ராஷ்டிராவை முன்னெடுப்பதில் பொது சிவில் சட்டத்திற்கு நிச்சயம் பங்குள்ளது” என்று கூறினார். இந்து ராஷ்டிரமே நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒரே வழி என்று கூறுவதன் மூலம் இந்து மதம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்றார். மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இத்தகைய சட்டம் இல்லாமல் இருந்த நம்மால் எதிர்கா லத்திலும் இருக்க முடியும் என்றும் குறிப்பிட்டார். பிரதமர் மோடி அரசு முறை பயண மாக அமெரிக்கா சென்ற போது முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, தான் மோடியுடன் உரை யாடினால், அதன் ஒரு பகுதி, ‘இந்தி யாவில் உள்ள சிறுபான்மை இன மக்களின் உரிமைகள் குறித்ததாக இருக்கும் என்று கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, இந்தியா வர்க்கங்களாலும், மதங்களாலும், பாலினங்களாலும் வேறுபாடுகளை கொண்டுள்ளது இது மிகப்பெரிய சவால்’ என்றார் அவர்.