states

காவிரியில் 9.220 டிஎம்சி தண்ணீரை உடனே திறக்க நடவடிக்கை தேவை

புதுதில்லி, ஜூலை 5- தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன், புத னன்று தில்லியில் ஒன்றிய அமைச் சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி னார்.  அப்போது, தமிழ்நாட்டுக்கு காவிரியில் திறந்து விட வேண்டிய  தண்ணீரை கர்நாடகா அரசு திறக்கா மல் உள்ளதாகவும், அதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்  டும் எனவும் கோரிக்கை வைத் தார்.  ஒன்றிய அமைச்சர் உடனான சந்திப்புக்கு பிறகு துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:  காவிரியில் தமிழ்நாட்டுக்கு ஜூன் மற்றும் ஜூலை 3-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி 12.213 டிஎம்சி நீர் வந்திருக்க வேண்டும். ஆனால் 2.993 டிஎம்சி தண்ணீர் மட்டுமே கிடைத்துள்ளது. 9.220  டிஎம்சி தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. இதுதொடர்ந்தால் டெல்டாவில் பயிர்கள் வாடிவிடும். இதனால் பற்றாக்குறையாக உள்ள தண்ணீரை கர்நாடகா அரசு திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.  மேலும் உச்சநீதிமன்ற உத்தர வின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ கத்துக்கான நீரை திறந்து விட நட வடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தேன். இதையடுத்து இணைச் செயலாளரை அழைத்து ஆலோசனை நடத்தி ஆணையத்து டன் பேசுவதாக ஒன்றிய அமைச்சர் கூறியுள்ளார். காவிரி நீர் மேலாண்மை ஆணை யம் என்பது சுதந்திரமான அமைப்பு அல்ல. ஒன்றிய அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில்தான் செயல்பட்டு வருகிறது. இதனால்தான் ஒன்றிய அமைச்சரை சந்தித்தோம். ஏற்கெ னவே இதுதொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கும் கடிதம் எழுதி உள்ளோம்.’’ இவ்வாறு அமைச்சர் துரை முரு கன் கூறினார்.

;