states

img

ஜெனரல் பிபின் ராவத் உடல் தகனம்

புதுதில்லி, டிச.10- குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில்  உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல் ராணுவ மரியா தையுடன் தகனம் செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் டிசம்பர் 8-ஆம் தேதி நிகழ்ந்த ஹெலி காப்டர் விபத்தில் பிபின்ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் பலியாகினர். அவர் களது உடல் வெலிங்டன் ராணுவக் கல்லூரியிலிருந்து சாலை மார்க்க மாக எடுத்து கோயம்புத்தூர் மாவட் டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் புதுதில்லி கொண்டு செல்லப்பட்டது.'

புதுதில்லி விமானநிலையத்தில் வியாழக்கிழமை இரவு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை பிபின்ராவத், மதுலிகா ராவத்  ஆகியோரது உடல்கள் இறுதி  அஞ்சலிக்காக அவர்களது இல்லம் அமைந்துள்ள தில்லி காமராஜ் பாக்கில் வைக்கப்பட்டிருந்தது. 

அவர்களது உடல்களுக்கு உள் துறை அமைச்சர்  அமித் ஷா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி னார்.  பிபின் ராவத் மற்றும் மதுலிகா ராவத் ஆகியோரின் மகள்கள்- கிருத்திகா மற்றும் தாரிணி - தங்கள்  பெற்றோருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி, உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி,  தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், எம்.பி  சுப்ரியா சூலே, திமுக எம்.பி.கனி மொழி, பாரதிய கிசான் சங்கத் தலை வர் ராகேஷ் திகாயத் மற்றும் ராணுவத் தளபதி நரவானே, விமானப்படை தளபதி விஆர் சவுத்ரி, கடற்படை தளபதி ஹரிகுமார் மற்றும்  இலங்கை-பூடான், பங்களாதேஷ் ராணுவ தளபதிகள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பிபின் ராவத்தின் இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு,  தில்லி கன்டோன்மெண்ட் பகுதியில் உள்ள பரார் சதுக்கத்தை சென்றடை ந்தது. 17 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க, முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றது.

;