புதுதில்லி, அக்.3- இடதுசாரி இயக்கத்தின் ஒப்பற்ற தலைவர்களில் ஒரு வரும், மகாராஷ்டிர மாநி லம் விவசாயத் தொழிலா ளர்கள் மற்றும் பழங்குடி யினர்கள் சங்கத்தின் தலை வருமான தோழர் குமார் சிரால்கர் காலமானார். நாசிக்கில் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனளிக் காமல் அக்டோபர் 2 அன்று இறந்துவிட்டார். தோழர் குமார் சிரால்கர் 2019ஆம் ஆண்டிலிருந்தே புற்று நோயால் பாதிக்கப்பட்டு அதற்கெதிராகப் போராடிக் கொண்டிருந்தார். தோழர் குமார் சிரால்கர் குறித்து சிஐடியு வெளி யிட்டுள்ள இரங்கல் செய்தி யில் கூறப்பட்டிருப்பதாவது: தோழர் குமார் சிரால்க ருக்கு சிஐடியு தன் ஆழ்ந்த அஞ்சலியைச் செலுத்திக் கொள்கிறது. பொறியாள ராக இருந்த தோழர் குமார் சிரால்கர் தன் வேலையை விட்டுவிட்டு 1970களின் முற் பகுதியில் வடக்கு மகா ராஷ்டிராவில் பழங்குடியி னரை அணிதிரட்டும் வேலை யைத் துவக்கினார். அவசர நிலைக் காலத்தில் சிறைப் படுத்தப் பட்டிருந்தார். 1980 களின் முற்பகுதியில் விவ சாயத் தொழிலாளர்களை அணிதிரட்டத் தொடங்கி னார். மகாராஷ்ட்ர மாநில விவசாயத் தொழிலாளர் சங் கத்தின் மாநில செயலாள ராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். வெகு காலம் அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் இணைச் செயலாளராக இருந்தார். மகாராஷ்ட்ராவில் சிஐடியு-வுடனும் நெருக்கமாகப் பிணைப்பினைக் கொண்டி ருந்தார். மகாராஷ்ட்ரா கரும்பு விவசாயிகளின் அவல நிலை குறித்து ஆய்வினைச் செய்திருக்கிறார்.
மார்க்சிய சித்தாந்தத்தில் ஆழமான புரிதல் உள்ள தோழர் குமார் சிரால்கர், இயக்கத்தில் ஒரு வலு வான வர்க்கப்பார்வையுடன் சித்தாந்தப் போராட்டங்க ளில் உறுதியுடன் நின்றார். இரண்டு புத்தகங்களை எழு தியிருக்கிறார். பல்வேறு அம் சங்கள் குறித்து பல கட்டுரை கள் எழுதியிருக்கிறார். தலித் துகள் மற்றும் பழங்குடியினர் நிலைமைகள் குறித்து ஏரா ளமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். மகா ராஷ்டிரா சிஐடியு-விற்கு முன்னணி ஊழியர்களை வளர்த்தெடுப்பதில் அவர்க ளுக்குக் கல்வி கற்பிப்பதில் மிகவும் உதவியாக இருந்தி ருக்கிறார். ஓர் உறுதியான புரட்சியா ளரான குமார் சிரால்கர் எளி மையிலும் எளிமையான தோழர் அவர் உடல் நலி வுற்றிருந்த சமயத்தில்கூட கிராமத்தில் பழங்குடியினரு டனேயே தங்கி இருந்தார். அவர் மறைவு, மகா ராஷ்டிராவின் தொழிற்சங்க இயக்கத்திற்கும் முற் போக்கு இயக்கத்திற்கும் பேரிழப்பாகும். சிஐடியு, அவருடைய குடும்பத்தா ருக்கும் தோழர்களுக்கும் தன் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறது. இவ்வாறு சிஐடியு அறிக் கையில் கூறியுள்ளது.(ந.நி.)