states

img

ரயில்வே, மின்சாரம் தனியார்மயத்தை தீவிரப்படுத்தும் மோடி அரசு

புதுதில்லி, ஜூலை 19- பாஜக அரசாங்கத்தின் கார்ப்பரேட்  ஆதரவு, மதவெறி மற்றும் மக்கள் விரோ தக் கொள்கைகளுக்கு எதிராகவும், மின்வாரியம் மற்றும் ரயில்வேயைத் தனியாருக்குத் தாரை வார்த்திடும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் சிஐடியுவின் சிறப்பு மாநாடு புதுதில்லி யில் உள்ள ஹர்கிசன் சிங் சுர்ஜித் பவ னில் செவ்வாய்க்கிழமையன்று நடை பெற்றது. சிறப்பு மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட பிரகடனம் வருமாறு: மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் நவீன தாராளமயக் கொள்கையின் ஒரு பகுதியாக அனைத்துத் துறைகளையும் தனியார் மயத்திற்குத் தாரை வார்த்திட மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை சிஐடியு கடுமையாக எதிர்க்கிறது.

மோடி அரசாங்கம், சுயசார்பு பாரதம்  (ஆத்மநிர்பாரத்) என்று சொல்லிக் கொண்டே, நாட்டின் பொதுத்துறை அனைத்தையும் தனியாருக்குத் தாரைவார்த்திடும் நடவடிக்கைகளை வெறித்தனமாக மேற்கொண்டு வருகிறது. அனைத்துக் குடிமக்களுக்கும் மின்சாரம், சுகாதாரம், கல்வி, வீட்டு  வசதி போன்ற அடிப்படைத் தேவை களை அளிக்க வேண்டிய அரசாங்க மானது தனது பொறுப்புகளைப் புறந் தள்ளிவிட்டு, இவை அனைத்தையும் தனியாரிடம் தாரை வார்த்திடும் நட வடிக்கைகளில் இறங்கி இருக்கிறது. அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் காரணமாக சாமானிய மக்களுக்கு வாழ்க்கையின் அடிப்படைத் தேவை கள் கிடைக்காத நிலை ஏற்பட்டிருக் கிறது. மேலும் மின்சாரம் மற்றும் ரயில்வேயைப் பயன்படுத்தி வந்த  நுகர்வோர்களும் இதனால் கடுமை யாகப் பாதிப்புக்கு உள்ளாகி இருக் கிறார்கள்.

மின்சாரம் - ரயில்வே தனியார்மயம்

இந்தப் பின்னணியில்தான் மின்சா ரம் மற்றும் ரயில்வேயைத் தனியாரு க்குத் தாரை வார்க்கும் நடவடிக்கை களைப் பார்த்திட வேண்டும். மின்சாரத் துறையில் ஒன்றிய அரசாங்கமும், மாநில அரசாங்கங்களும் தனியார் மயத்திற்காகக் கொண்டுவந்த நட வடிக்கைகளை மின்வாரிய ஊழியர் களும், அலுவலர்களும் ஒன்றுபட்டு நின்று முறியடித்ததற்கு, இந்த சிறப்பு  மாநாடு வாழ்த்துக்களையும், வணக்கங் களையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு இவர்கள் உறுதியுடன் எதிர்த்து வந்த போதிலும், மோடி அரசாங்கம் தனியார்மயக் கொள்கை யை எப்படியாவது அமல்படுத்திட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக் கிறது. ஆட்சியாளர்களின் தனியார்மயக் கொள்கைகளை ஊழியர்களின் போராட்டத்தால் மட்டும் நிறுத்திவிட முடியாது என்று இந்த சிறப்பு மாநாடு உறுதியாக நம்புகிறது. இதனைப் பயன்படுத்திவரும் அனைத்துப் பகுதி மக்களும் அரசின் தனியார்மயக் கொள்கைக்கு எதிராக அணிதிரண்டு, போராடும் மின்சாரத்துறை மற்றும் ரயில்வே ஊழியர்களுடன் இணைந்திட வேண்டும்; அப்போதுதான் அரசின் தனியார்மயக் கொள்கையைத் தடுத்து நிறுத்திட முடியும். மின்சாரம் மற்றும் ரயில்வேயைத் தனியார்மயப்படுத்திடும் அரசின் இத்தகைய நாசகரக் கொள்கைக்கு எதி ராக தொழிலாளர்கள் மற்றும் மக்கள்  அனைவரையும் அணிதிரட்டி, நாடு தழுவிய அளவில் விரிவான அளவில் இயக்கத்தை வளர்த்தெடுத்திட வேண்டும். இதற்கான பிரச்சாரத்திலும் போராட்டத்திலும் அனைத்துப் பிரிவு மக்களும் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று அறைகூவி அழைக்கிறது.

கோரிக்கைகள்

  1.     பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்காதே, பொதுத்  துறை சொத்துக்களை தனியாருக்கு விற்றிடும் தேசியப் பணமாக்கல் கொள்கையை (NMP-National Monetisation Pipeline கொள்கையைக்) கைவிடுக!
  2.     அனைவருக்கும் கட்டுப்படியாகக் கூடிய விலையில் மின்சாரம் அளிக்க வேண்டியது அரசின் கடமை. 2022 மின்சாரத் திருத்தச் சட்ட முன்வடிவை விலக்கிக்கொள். மின் விநியோகத்தில் “ஸ்மார்ட் மீட்டர்” திட்டங்கள் உட்பட சந்தை அடிப்படை யிலான விநியோக முறை அனைத்தையும் கிழித்தெறிக!
  3.      இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுக. பாதுகாப்பு மற்றும் நிர்வகிப்ப தற்குப் போதிய அளவிற்கு செலவினங் களைச் செய்து பயணிகளின் பாது காப்பை உத்தரவாதப்படுத்திடுக!. தனி யாருக்குத் தாரை வார்க்கவேண்டும் என்ற நோக்கத்துடன் ரயில்வேயைப் பல பகுதிகளாகப் பிரித்திடும் நட வடிக்கைகளைக் கைவிடுக!
  4.     ரயில்வேயில் டிக்கெட் விற்பனை, நிர்வாகப் பணிகள் முதலான வற்றைத் தனியாருக்கு விடும் நடவடிக்கைகளைக் கைவிடுக!
  5.     பெரும் பணக்காரர்களுக்கு வரி விதித்திடுக! கார்ப்பரேட் வரியை உயர்த்திடுக. செல்வ வரியை அறி முகம் செய்திடுக! இவற்றின்மூல மாக பொதுப் போக்குவரத்து, சுகா தாரம், கல்வி மற்றும் பல பொதுத் துறை நிறுவனங்களை வலுப்படுத்திடுக!.

தொடர் பிரச்சாரம் மற்றும் போராட்டம்

இவற்றை நிறைவேற்றுவதற்காக, சிறப்பு மாநாடு கீழ்க்கண்டவாறு நட வடிக்கைகளை மேற்கொண்டிடவும் திட்டமிட்டிருக்கிறது; செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 10 வரையிலும் மாவட்ட அளவில் சிறப்பு மாநாடுகள் நடத்துவது; அக்டோபர் 25 முதல் நவம்பர் 2 வரை அனைத்துப் பகுதிகளுக்கும் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வது; துண்டுப்பிர சுரங்கள், தெருமுனைக் கூட்டங்கள், வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தல் முதலானவற்றை மேற்கொள்வது; வட்டமேசை மாநாடுகள், கருத்த ரங்கங்கள், பத்திரிகையாளர் சந்திப்பு கள் நடத்துவது எனத் தீர்மானிக்கப் பட்டுள்ளது.  நவம்பர் 3 அன்று மின்சாரம் மற்றும் ரயில்வேயை தனியார்மயப்படுத்திடும் நடவடிக்கைகளுக்கு எதிராக மாவட்ட அளவில் பெருமளவில் ஆர்ப்பாட்டங் கள் நடத்திட வேண்டும்; ரயில்வே  நிலையங்கள் முன்பும் ஆர்ப்பாட்டங் கள் நடத்திட வேண்டும் எனவும்  சிஐடியு மாநாடு அழைப்பு விடுத்தது.                       (ந.நி.)