states

img

ஆதாரங்களை அழித்த பிறகே பிரஜ்வால் ரேவண்ணா சரண்?

பிரஜ்வால்  ரேவண்ணா தனது செல்பேசி யில் இருந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான கோப்புகளை- அதாவது தன்மீது கூறப்படும் முக்கிய குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை அழித்ததுடன், காவல்துறை யிடமும் தனக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை  என்பதை உறுதி செய்த பிறகு தான் வெள்ளி யன்று சரணடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாலியல் வன்கொடுமைக் காட்சிகளை படம் பிடித்ததாகக் கருதப்படும் இரண்டு செல்பேசிகளை விசாரணைக் குழு கைப்பற்றியது. ஆனால், அவற்றின் நினை வகம் (மெம்மரி) காலியாக உள்ளதாக தற்போது  கூறப்படுகிறது. பிரஜ்வலுக்கு எதிரான ஆதார மாக பாஜக தலைமையிடம் ஒப்படைக்கப்பட்ட மெமரி ஸ்டிக்கில் 2,976 வீடியோக்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. பிரிஜ்வால் விமான நிலையத்துக்கு வந்ததும், ஐபோன்கள், மடிக்கணினிகள் உள்ளிட்ட அனைத்து கருவிகளையும் விசாரணைக் குழுவினர் அவரிடமிருந்து கைப்பற்றினர். ஆனால் அவர் வெளிநாட்டில் இருந்தபோதே, ஆதாரங்களை அழித்து விட்டதால், அந்தப் பதிவுகள் அனைத்தும் காலியாக இருந்துள்ளன. முதற்கட்ட விசா ரணையில் பிரஜ்வால்   ஆதாரங்களை அழித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐ கிளவுடில் சேமிக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் நீக்கப்பட்டுள்ளன.  பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மூன்று பெண்கள் மட்டுமே பிரஜ்வால்  மீது புகார்  அளித்துள்ளனர். மற்ற அனைவரும் அமைதி யாக உள்ளனர். பிரஜ்வால்  மீது மிரட்டல் மற்றும்  கடத்தல் வழக்குகள் பதிவாகி உள்ளன. பாலியல் வன்கொடுமை மற்றும் சுரண்டலுக்கு ஆளான பெண்களின் வீடியோக்கள் வெளி வந்ததையடுத்து, பாதிக்கப்பட்ட அந்தப் பெண்கள் பலர் அவமானத்தை தாங்க முடியாது என்பதால், குடும்பத்துடன் ஊரை விட்டு வெளி யேறி விட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே, பிரஜ்வாலின் கையிலிருந்து நேரடி யாக கைப்பற்றப்பட்ட போன்கள் மற்றும் ஹசனில் உள்ள அவரது வீட்டில் இருந்து கைப் பற்றப்பட்ட பழைய செல்பேசிகளில் இருந்து நினைவகத்தை மீட்டெடுக்க ஹைதராபாத்தில் உள்ள தடயவியல் ஆய்வகத்தை சிறப்பு விசாரணைக்குழு நம்பியுள்ளது.