அகமதாபாத், டிச.4- ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சொந்தத் தொகுதி யான காந்தி நகரில், கிரிக்கெட் மற்றும் கபடி போட்டிகளை நடத்த பாஜக-வினர் திட்டமிட்டுள்ளனர். அதிக எண்ணிக்கையிலான இளை ஞர்களை பாஜகவுக்கு கொண்டு வரும் நோக்கத்துடன் இந்த போட் டிக்கான ஏற்பாடுகளை செய்து வரு வதாக கூறும் அவர்கள், போட்டிக்கு ‘காந்திநகர் லோக்சபா பிரீமியர் லீக்- 370’ அல்லது ‘ஜி.எல்.பி.எல். 370’ என்ற பெயரைச் சூட்டி சர்ச்சை ஏற்படுத்தி யுள்ளனர். ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந் தஸ்து வழங்கும் அரசியல் சாசன சட்டப்பிரிவு 370 நீக்கம், உள்துறை அமித் ஷாவின் மாபெரும் சாதனை என்று பிரச்சாரம் செய்யும் வகையில் ‘370’-ஐ இணைத்துள்ளனர்.
“இந்த பிரீமியர் லீக் அமித் ஷா தலைமை யில் ரத்து செய்யப்பட்ட இந்திய சாச னப் பிரிவு 370-இன் பெயரில்தான் நடத்தப்படுகிறது என்று அகமதா பாத் நகர பாஜக பொதுச்செயலாளர் ஜிதுபாய் படேல் வெளிப்படையா கவே கூறியுள்ளார். “வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள (இளம்) வாக்காளர்களை பாஜக வுக்கு ஆதரவாக மாற்றுவதற்காக இந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.
அதற்காக கிரிக்கெட், கபடி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டிலும் குறைந்தது இரண்டு அணிகள் (கிரிக்கெட் மற்றும் கபடிக்கு தலா ஒன்று) இருக்க வேண் டும் என்பதே இலக்கு!” என்று காந்தி நகர் மக்களவைத் தொகுதி பாஜக பொறுப்பாளர் ஹர்ஷத் படேல் கூறி யுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா முதலில் எங்களில் 8 முதல் 10 நபர்களி டம் இந்த போட்டி பற்றி ஆலோ சனை மேற்கொண்டார்.
பிறகு 200-250 கட்சித் தொண்டர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அணி கள், இடங்கள் மற்றும் வர்ணனையா ளர்களை அடையாளம் காண்பது முதல் விதிகளை உருவாக்குவது வரை பொறுப்புகள் ஒதுக்கப்பட் டுள்ளன. தற்போது ஆண்களுக்கு மட்டுமே இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது. போட்டியை விளம்பரப்படுத்த வார்டு அளவில் ‘வாட்ஸ் ஆப்’ குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன என்றும் ஹர்ஷத் படேல் தெரிவித்துள்ளார்.