புதுதில்லி, ஆக.22- லட்சத்தீவு எம்.பி., பைசல் மீதான கொலை முயற்சி வழக்கை, மீண்டும் விசாரிக்க, உயர் நீதிமன்றத்துக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லட்சத்தீவு எம்.பி.யை குற்றவாளி என்று தீர்ப்பளித்த கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்றம், வழக்கை மறுபரிசீலனை செய்து ஆறு வாரங்களுக்குள் தீர்ப்பளிக்க உத்தரவிட்டது. அதே சமயம், உயர்நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை முகமது பைசல் எம்பியாக தொடரலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.