states

img

‘நிவர்’ மீட்புப்பணிக்கு 30 குழுக்கள் நியமனம்....

புதுதில்லி:
நிவர் புயல் மீட்புப் பணிகளுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையின் 30 குழுக்கள்நியமனம் செய்யப்பட்டுள்ளது. 

இன்று கரையைக் கடக்கும் வங்கக் கடலில் உருவாகி உள்ள நிவர் புயலால்தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கப் பட்டுள்ளது. இந்த மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாநில அரசுகளுக்கு உதவுவதற்காக தேசிய பேரிடர் மீட்புப்படையில் (என்.டி.ஆர்.எப்.) இருந்து 30 குழுவினர் இந்த மாநிலங்களுக்கு அனுப்பப்படு கின்றனர். ஒவ்வொரு குழுவிலும் 35 முதல் 45 வரையான வீரர்கள் இடம்பெறுவார்கள். இதில் 12 குழுக்கள் புயலால்பாதிக்கப்படும் பகுதிகளில் நிறுத்தப்படு வார்கள். 18 குழுக்கள் தயாராக வைக்கப் பட்டிருப்பார்கள்.

இந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுதல், மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் மாநில அரசு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவார்கள். முறிந்து விழும் மரங்களை அகற்றுவதற்கு நவீன ஆயுதங்கள், அடிப்படை மருந்துகள் மற்றும் உபகரணங்களும் இந்த படையினரிடம் இருக்கும் என்று தேசிய பேரிடர் மீட்புப்படை தரப்பில் கூறப்படுகிறது.

;