states

img

சீத்தாராம் யெச்சூரியிடம் வாழ்த்து பெற்ற அம்ரா ராம்

ராஜஸ்தான் மாநிலம் சிகார் மக்களவை தொகுதியின் “இந்தியா” கூட்டணி வேட்பாளராக களம் கண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் அம்ரா ராம் 72,896 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்நிலையில், தில்லியில் உள்ள அகில இந்திய விவசாயிகள் சங்க அலுவலகத்தில் சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி புதிதாக நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட அம்ரா ராமிற்கு மலர் கொத்து அளித்து நேரில் வாழ்த்து தெரிவித்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், சுபாஷினி அலி, தபன் சென், அசோக் தாவ்லே, ஏ.விஜயராகவன், ஹன்னன் முல்லா மற்றும் மத்தியக் குழு உறுப்பினர்கள் விஜூ கிருஷ்ணன், பி.கிருஷ்ணபிரசாத் உள்ளிட்டோர்கள் பங்கேற்று அம்ரா ராமிற்கு வரவேற்பு அளித்தனர்.

;