states

கிருஷ்ண ஜென்மபூமியை ஆதித்யநாத் மீட்டுத் தருவார்..

உ.பி. தேர்தலில் பாஜக-வுக்கு பிரச்சாரம் செய்வீர்களா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “நான் எந்தக் கட்சியையும் சாராதவர். ஆனால், யார் தேசியவாதிகளோ அவர்களுக்காக நான் பிரச்சாரம் செய்வேன்” என்று பாஜக ஆதரவு நடிகை கங்கனா ரணா வத் நடுநிலையாளர் போல கருத்து கூறியுள்ளார். அதே பேட்டி யிலேயே, “கிருஷ்ணரின் உண்மையான ஜென்மஸ்தானத்தை மக்கள் காண்பதற்கு முதல்வர் ஆதித்யநாத் நடவடிக்கைகளை எடுப்பார் என நம்புகிறேன்” என்றும் அவர் தனது சுயரூபத்தை வெளிப்படுத்தியுள்ளார். மதுராவில் கிருஷ்ணர் பிறந்த இடத்தை ஆக்கிரமித்து கியான்வாபி மசூதி கட்டுப்பட்டுள்ளதாகவும், அதனை ஆதித்யநாத் அகற்றுவார் என்பதையுமே கங்கனா இவ்வாறு கூறியுள்ளார்.

;