states

img

இளைஞர்களின் எதிர்காலத்தை சிதறடிக்கும் ‘உபா’ சட்டம்

புதுதில்லி, டிச.18- ‘உபா’ சட்டம் எனப்படும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (Unlawful Activities Prevention Act - UAPA) பிரயோகம் குறித்து, நாடாளுமன்றத்தில் எழுப் பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய அர சின் உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் அண்மையில் மாநி லங்களவையில் பதிலளித்திருந்தார். அதில், “உபா சட்டத்தின் கீழ், கடந்த 2019-இல் 1,948 போ்களும், 2020-இல் 1,321 பேர்களும் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக உத்தரப் பிர தேசத்தில் 361 பேரும், ஜம்மு - காஷ்மீ ரில் 346 பேரும், மணிப்பூரில் 225 பேரும் கைது செய்யப்பட்டனா்.

ஜம்மு- காஷ்மீர், தில்லியில் கடந்த 2019-ஐ காட்டிலும் 2020-இல் கைது எண்ணிக்கை அதிகரித்துள் ளது. தில்லியில் கடந்த 2019-இல் 9 பேர் கைதான நிலையில், 2020-இல் இந்த எண்ணிக்கை 12-ஆக உயர்ந் துள்ளது. ஜம்மு- காஷ்மீரில் 2019-இல் 227 பேர் கைதாகினர். இது 2020-இல் 346-ஆக அதிகரித்துள்ளது. பீகார், மகாராஷ்டிரா, மேகா லயா, பஞ்சாப், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களிலும் 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2020- இல் கைது எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதேநேரம் 10 மாநிலங்களிலும், 6 யூனியன் பிர தேசங்களிலும் யுஏபிஏ சட்டத்தின் கீழ் கடந்தாண்டில் ஒருவா்கூட கைது செய்யப்படவில்லை” என்று நித்யா னந்த ராய் குறிப்பிட்டிருந்தார். இதையொட்டி, கடந்த மூன்று ஆண்டுகளில், நாடு முழுவதும் ‘உபா’ சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டவர்களில் 53 சதவிகிதம் பேர்  30 வயதுக்கும் குறைவான இளைஞர் கள் என்ற தகவல்கள் அமைச்சரின் அறிக்கை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதிலும் ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கும் உத்தரப்பிரதேசத்தில் இவ்வாறு ‘உபா’ சட்டத்தில் கைது செய்யப்பட் டவர்களில் 70 சதவிகிதம் பேர் 30 வய துக்கு உட்பட்டவர்கள் என்ற அதிர்ச்சிகர மான உண்மையும் வெளிப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மூன்று ஆண்டுகளில் அதிகபட்சமாக 1,338 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 931 பேர் 30 வயதுக்கு உட்பட்ட வர்கள். இது கைதானவர்களின் எண்ணிக்கையில் 69.58 சதவிகிதம் ஆகும். உ.பி.க்கு அடுத்தடுத்த இடங் களை மணிப்பூர் (499), ஜம்மு காஷ்மீர் (366), ஜார்க்கண்ட் (218), அசாம் (122) ஆகிய மாநிலங்கள் பிடித்துள்ளன. 2020-ஆம் ஆண்டில் மட்டும், மணிப்பூர், ஜார்க்கண்ட், அசாம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முறையே 169, 86, 76 மற்றும் 72 என ‘உபா’ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2018 முதல் 2020 வரை ஒட்டு மொத்தமாக 4 ஆயிரத்து 390 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் களில் 1,080 பேர் ஜாமீன் பெற்றனர்.

325 பேர் விடுவிக்கப்பட்டனர். 149 பேர் மட்டுமே குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டுள்ளனர். அதாவது, தண்டனை பெற்றவர் களுடன் ஒப்பிடும் போது விடு விக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  அதிகமாக உள்ளது. இது இந்தச் சட் டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான வலுவான சாட்சியாக மாறியுள்ளது. கடந்தாண்டு ஜூலை மாதம், உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அபுதாப் ஆலம், யுஏபிஏ ஒரு ‘கொடூர மான சட்டம்’ என்றும், சமூக செயற் பாட்டாளர் ஸ்டான் சுவாமியின் மர ணத்திற்கு எந்த சந்தேகமும் இன்றி அதுதான் காரணம் என்றும் கூறினார்.

மேலும் யுஏபிஏ சட்ட கைதுகளில் 2 சதவிகிதமே சராசரியான தண்டனை விகிதத்தைக் கொண்டிருக்கிறது. விசாரணை முடிவில் பொய்யாகக் கூடிய குற்றச்சாட்டுகளுக்காக ஒரு வர் 8 முதல் 12 ஆண்டுகள் வரை சிறை யில் அடைக்கப்படும் அவலத்தை இந்த சட்டம் உருவாக்குகிறது என் றும் குறிப்பிட்டார். அந்த வகையில், யுஏபிஏ சட்டத் தில் திருத்தங்கள் செய்யப்பட வேண் டும் என்பது கோரிக்கையாக உள் ளது. ஆனால், “யுஏபிஏ சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பான எந்தவொரு முன்மொழி வும் தற்போது பரிசீலனையில் இல்லை” என்று அமைச்சர் நித்யா னந்த ராய் நாடாளுமன்றத்தில் தெரி வித்துள்ளார். இந்தச் சட்டத்தின் கீழ் காவல் மரணங்கள் ஏதேனும் பதிவாகியுள்ள னவா? என்ற கேள்விக்கும், அது தொடர்பான தகவல்கள் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தால் (NCRB) பராமரிக்கப்படவில்லை” என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்து தப்பித்துக் கொண்டுள்ளார்.

;