states

img

இந்தியாவை விட விலை குறைவுதான்!

புதுதில்லி, செப்.21- சர்வதேச சந்தையில் கச்சா எண்  ணெய் விலை குறைந்துள்ள போதி லும், பாகிஸ்தான் அரசு அந்நாட்டில் பெட்ரோல் விலையை உயர்த்தி யுள்ளது. பணவீக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானில், அங்குள்ள ஷெபாஸ் ஷெரீப் அர சாங்கம் புதன்கிழமையன்று பெட்  ரோல் விலையை லிட்டருக்கு 1 ரூபாய் 45 காசுகள் உயர்த்தியுள் ளது. இதன் மூலம் அந்நாட்டில் ஒரு  லிட்டர் பெட்ரோல் விலை 235 ரூபாய் 98 ரூபாயிலிருந்து 237 ரூபாய் 43 காசு களாக உயர்ந்துள்ளது. இதுதொடர்பான செய்தி இந்திய ஊடகங்களில் வெளியான நிலை யில், வழக்கம்போல பாஜக-வினர், பார்த்தீர்களா... பாகிஸ்தானில் பெட்ரோல் விலை இந்தியாவை விட  இரண்டு மடங்கு அதிக விலையில் விற்கப்படுகிறது. ஆனால், நமது பிர தமர் மோடியின் சாமர்த்தியம் காரண மாக இங்கே பெட்ரோல் விலை கட் டுக்குள்தான் வைக்கப்பட்டுள்ளது என்று பிரச்சாரம் செய்யத் துவங்கி னர்.

இந்நிலையில், பாஜகவினரின்  பிரச்சாரத்தில் இருக்கும் பொய்  களை புள்ளிவிவரம் ஒன்று அம்பலப்  படுத்தியுள்ளது. இப்போதும் இந்தி யாவை விட பாகிஸ்தானில் பெட்  ரோல் விலை குறைவுதான் என்று  அந்த புள்ளிவிவரம் குறிப்பிட்டுள்ளது. சர்வதேச நாணயச் சந்தையில் இந்தியாவின் ஒரு ரூபாய்க்கு இணை யான பாகிஸ்தான் நாட்டின் ரூபாய் மாற்று மதிப்பு 3 ரூபாய் 02 காசுகளா கும். அந்த வகையில் பார்க்கும் போது, பாகிஸ்தானில் அந்நாட்டு நாணய மதிப்பில் 237 ரூபாய் 43 காசு களுக்கு விற்கப்படும் பெட்ரோல் விலையானது, இந்திய ரூபாய் மதிப்  பில் பார்த்தால் 78 ரூபாய் 75 காசு கள்தான். ஆனால், இந்தியாவில் தலைநகர் தில்லியில் ஒரு லிட்டர்  பெட்ரோல் 96 ரூபாய் 72 காசுகளுக் கும், இதுவே சென்னையில் 102  ரூபாய் 63 காசுகளுக்கும் விற்கப்படு கிறது. அதாவது, பாகிஸ்தானைக் காட்டிலும் இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 25 ரூபாய் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது என்று அந்த புள்ளிவிவரம் கூறுகிறது. எனவே, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந் துள்ள நேரத்தில், பாகிஸ்தான் அரசு விலையை உயர்த்தியிருப்பதும், இந்தியாவின் மோடி அரசு விலை யைக் குறைக்காததுடன், நீண்டகால மாக கூடுதல் விலைக்கு விற்றுவரு வதும் - இந்த இரண்டுமே மக்களைச் சுரண்டும் நடவடிக்கையாகத்தான் அமைந்துள்ளது. பாகிஸ்தானில் பெட்ரோல் ஒரு லிட்டர் 237 ரூபாய் 43 காசுகள், டீசல்  247 ரூபாய் 43 காசுகள், மண்ணெண்  ணெய் 202 ரூபாய் 02 காசுகள் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

;