states

img

விவசாயிகளின் கோபத் தீயில் பாஜக

ஒரே கட்டமாக 13 தொகுதிகளுக் கான தேர்தல் ஜுன் 1 ஆம்  தேதி பஞ்சாபில் நான்குமுனைப் போட்டி நடக்கிறது. எனினும் விவசாயி களின் கோபத்தீயில் சிக்கித் திணறி வருகிறது பாஜக. பஞ்சாபில் இரண்டரை ஆண்டு களுக்கு முன் நடந்த சட்டசபை தேர்த லில் அமோக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி, லோக்சபா தேர்தலில் சவாலை சந்தித்து வருகிறது. காங்கிரஸில் உள்ள உட்பூசல்களை மூலதனமாக கொண்டு, ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தது, இப்போது பதவிக்கு எதிரான உணர்வை எதிர்கொள்கிறது. ஆம் ஆத்மி, காங்கிரஸ், அகாலி தளம், பாஜக ஆகிய கட்சிகள் நான்கு  முனைப் போட்டியை பஞ்சாபில் எதிர் கொள்கின்றன. பகுஜன் சமாஜ் கட்சி யும் அனைத்து தொகுதியிலும் உள் ளது. இங்குள்ள 13 தொகுதிகளுக்கும் ஜூன் 1-ம் தேதி வாக்குப்பதிவு நடை பெறுகிறது. 2019இல் காங்கிரஸ் 8 இடங்களிலும், ஆம் ஆத்மி ஒரு இடத்தி லும், அகாலிதளம்-பாஜக கூட்டணி 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. நிதி நெருக்கடி காரணமாக பகவந்த் மானின் அரசால் வாக்குறுதிகளை நிறை வேற்ற முடியவில்லை. பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய், குறைந்தபட்ச விலை  சட்டம் போன்ற வாக்குறுதிகள் காகி தத்தில்தான் உள்ளன. போதைப் பொருள் மற்றும் குண்டர் படை அர சாங்கத்திற்கு நெருக்கடியை உரு வாக்குகிறது. மாநிலத்தில் பிரச்சாரம் செய்ய வந்த காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கேவும் கடுமையான போதைப்பொருள் பிரச்சனையை எழுப்பினார். ஆட்சியை இழந்ததாலும், முன் னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங் உள்ளி ட்டோர் பாஜகவுக்கு சென்றதாலும், காங்கிரஸ் பலவீனமடைந்துள்ளது. மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் அம்ரீ ந்தர் சிங் ராஜ் வாரிங் லூதியானா விலும்,  முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங்  சன்னி ஜலந்தரிலும், முதல்வர் பகவந்த் மானின் செல்வாக்கு மிக்க சங்ரூரில் மூத்த தலைவர் சுக்பால் சிங் கைரா வும் களத்தில் உள்ளனர். தொடர் தோல்விகளால் துவண்டு போன சிரோமணி அகாலி தளம், மீண்டும் வரப் போராடி வருகிறது. விவ சாயிகளின் கோபத்தால் பாஜக கூட்ட ணியில் இருந்து விலகிய போதும் சீக்கி யர்களின் வாக்குகளை ஒருங்கிணைக்க முடியவில்லை. அகாலி தளம் கை விட்டதால், பாஜக பரிதாப நிலையில் உள்ளது. உண்மையில் விவசாயி களின் கோபத் தீயில் பாஜக பற்றி எரி கிறது. பிரதமர் மோடியின் பேரணியில் இருந்து கேப்டன் அம்ரீந்தர் சிங் உள்ளி ட்டோர் விலகி நின்றதும் தோல்வியை முன்னறிந்த செயலாகும்.   தேசாபிமானியில் ரிதின் பவுலோஸ்

;