புதுதில்லி,டிச.15- இந்தியாவில் 600 சட்டவிரோத லோன் வழங்கும் செயலிகள் செயல் பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி எச்ச ரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : இந்தியாவில் சட்டவிரோத பணக் கடன் வழங்கும் செயலிகள் தற்போது அதிகம் செயல்படுகின்றன. 600 சட்ட விரோத லோன் வழங்கும் செயலிகள் செயல்பட்டு வருகின்றன. சந்தேகத்தி ற்கு இடமில்லாத பயனர்களை ஏமாற்று வதற்காக ஆண்ட்ராய்டு பயனர்க ளுக்கு இந்த செயலிகள் பல ஆப் ஸ்டோர்களில் கிடைக்கின்றன. லோன், இன்ஸ்டன்ட் லோன், விரைவு லோன் போன்ற முக்கிய வார்த்தை களை இணையத்தில் தேடும்போது சுமார் 1,100 லோன் வழங்கும் செயலி கள் கிடைக்கின்றன. இவற்றுள் பல செயலிகள் சட்டவிரோத பணக்கடன் வழங்கும் செயலிகள். டிஜிட்டல் லெண்டிங் ஆப்ஸ் (டிஎல்ஏ) தொடர்பான புகார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தீர்க்க, தற்போது சாசெட் என்ற ஒரு தனி போர்ட்டலை அமைத்துள்ளோம் . இந்த போர்டல் மீது ஏராளமான புகார்கள் தற்போது வந்துள்ளன. பெரும்பாலான புகார்கள் முறையாக பதிவுசெய்யப் படாத அமைப்புகள் மற்றும் ரிசர்வ் வங்கி யால் கட்டுப்படுத்தப்படாத நிறுவனங்க ளால் நிகழ்கின்றன . ஜனவரி 2020 முதல் மார்ச் 2021 வரை சுமார் 2562 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.