states

img

திரிபுராவில் தலைவிரித்தாடும் போதை ஊசி

பாஜக ஆளும் வடகிழக்கு மாநி லங்களில் ஒன்றான திரிபுரா வில் ஆட்கொல்லி நோயான எச்ஐவி வைரஸின் எய்ட்ஸ் நோய் வேக மாக பரவி வருகிறது. திரிபுரா மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் (டிஎஸ்ஏ சிஎஸ்) மூத்த அதிகாரி ஒருவர் அளித்த தகவலின்படி,”நாங்கள் இதுவரை எச்ஐவி பாதிக்கப்பட்ட 828 மாணவர்களை பரி சோதனை மூலம் அடையாளம் கண்டுள் ளோம். அவர்களில் 572 மாணவர்கள் உயி ருடன் உள்ள நிலையில், 47 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 572 மாணவர்களில் பெரும்பாலானோர் திரிபுராவிலிருந்து பிற நாட்டு நிறுவனங்களில் உயர்படிப்புக்காக இடம்பெயர்ந்துள்ளனர்” என அவர் கூறினார்.

போதை ஊசி தான் காரணம்

பாதுகாப்பற்ற பாலியல் உறவு மூலம் எச்ஐவி வைரஸ் பரவினாலும் ஊசி,  மொட்டை அடிக்கும் பிளேடு மூலமாகவும் எச்ஐவி வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என்ற நிலையில், திரிபுராவில் போதை ஊசி  மூலமே மாணவர்களுக்கு எச்ஐவி வைரஸ் பரவி வருவதை திரிபுரா எய்ட்ஸ்  கட்டுப்பாட்டுச் சங்கம் சுட்டிக்காட்டி யுள்ளது.

பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு திரிபுரா வில் போதைப் பொருள் புழக்கம் மிக மோச மான அளவில் அதிகரித்துள்ளது. மாண வர்களின் முக்கிய உணவுப்பொருள் போல போதை ஊசி பயன்பாடு உள்ளது. போதை ஊசி இல்லா பள்ளிகள், கல்லூரிகள் இல்லை என்ற சூழல் உள்ளது. திரிபுரா எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்தின் அறிக்கையின் படி, மாநிலத்தில் 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஊசி மூலம் போதைப் பொருள் பயன்படுத்துவது  தெரிய வந்துள்ளது. போதை ஊசி மூலமே மாண வர்கள் எச்ஐவி வைரஸால் உயிரிழந்து வருகின்றனர். மாணவர்களின் நலனை பற்றி அக்கறை கொள்ளாத திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா கேரளா மற்றும் மேற்குவங்கத்தில் பாஜக  ஆட்சியைப் பிடிப்பது பற்றி பேசி வருகிறார்.