- உலகின் முதல் பறக்கும் பைக் அமெரிக்காவில் அறி முகம் செய்யப்பட்டுள்ளது. “ஸ்டூரிஸ்மோ ஹோவர் பைக்” என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த பைக் 40 நிமிடங்கள் பறக்கும் திறனும், மணிக்கு 62 மைல் வேக த்தை எட்டும் எனக் கூறப்பட்டுள்ளது. தற்போதைய விலை 77 லட்சம் டாலர் (ரூ.61 கோடி) என நிர்ண யிக்கப்பட்டுள்ள நிலையில், 2025-ஆம் ஆண்டி ற்குள் 55,000 டாலராக (ரூ.39லட்சம்) விலை குறையும் என பறக்கும் பைக்கை தயாரித்துள்ள ஏர்வின்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
- பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறையை அறிவித்துள்ளது தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை. 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் அக்.9-ஆம் தேதி வரையிலும், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயி லும் மாணவர்களுக்கு அக்.1 முதல் அக்.5-ஆம் தேதி வரையிலும் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. “எண்ணும் எழுத்தும் திட்ட வளரறி” மதிப்பீட்டுத் தேர்வுக்காக 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் விடு முறை அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.
- “புலி” திரைப்படத்திற்கு பெற்ற ரூ.15 கோடி சம் பளத்தை மறைத்ததாக கூறி நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- எஸ்எஸ்சி ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை செப்டம்பர் 21-ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்க அலிப்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மேற்கு வங்க இடைநிலைக் கல்வி வாரியத்தின் முன்னாள் தலைவர் கல்யாண்மோய் கங்குலிக்கும் செப்., 21-ஆம் தேதி வரை சிபிஐ காவல் அளிக்கப்பட்டுள்ளது.
- பஹ்ரைன் நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அல்-வெஃபக் தேசிய இஸ்லாமிய அமைப்பு அறிவித்திருக்கிறது. அரசியல் ரீதியாக எதிர்க்கட்சியினர் கடுமையாக ஒடுக்கப்படுவதாகவும், சரியான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியே இந்தப் புறக்கணிப்பைச் செய்வதாக அக்கட்சி கூறியுள்ளது. நவம்பர் 12 அன்று நடக்கும் தேர்தலைப் புறக்கணிப்பது தேசியக் கடமை என்றும் அக்கட்சி அறிவித்திருக்கிறது.
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் முழு உறுப்பினர் அந்தஸ்தை ஈரான் பெறுகிறது. 2001-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு ஆசிய நாடுகளுக்கிடையில் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
- இந்தியா, சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் தற்போது உறுப்பினர்களாக உள்ளன. 2005-ஆம் ஆண்டில் இருந்து பார்வையாளர் அந்தஸ்தைக் கொண்டிருந்த ஈரான் தற்போது முழு உறுப்பினராக இணைகிறது.
- அங்கோலாவின் ஜனாதிபதியாக மீண்டும் ஜோவோ லூரென்கோ பதவியேற்றிருக்கிறார். ஆகஸ்ட் 24-ஆம் தேதியன்று நடைபெற்ற தேர்தலில் அவர் தலைமையிலான அங்கோலா விடுதலைக்கான மக்கள் இயக்கம் 51.17 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது. அவரது பதவியேற்புக்கு எதிர்ப்பு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டதால், தலைநகர் லுவாண்டோவின் தெருக்களில் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.