மணிப்பூரில் பெண்களை நிர்வாண ஊர் வலம் நடத்தி, கும்பல் வன்புணர்வு செய்த அயோக்கியத்தனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் 77 நாட்கள் கழித்துத்தான் பிரதமரே வாய்திறக்கிறார். குற்றங்கள் நடக்கும்போது போய் நிற்கவேண்டிய போலீசே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக அந்தப் பெண் சொல்லியிருக்கிறார். இதற்கு பிரதமரும், அந்த மாநில முதலமைச்சரும் பதில் சொல்ல வேண்டும். நமது சமூகத்தில், பெண்ணினுடைய உடல் மீது குடும்பம் மற்றும் சமூகத்தின் கெளரவத்தை யும் மரியாதையையும் சுமத்தி வைத்திருப்ப தால்தான் இதுபோல் செய்யத் தோன்றுகிறது. பெண்களை நிர்வாணப்படுத்திவிட்டால், உங்களை நாங்கள் அவமானப்படுத்தி விட்டோம் என்பது போல், ‘அவமானங்களின் சின்னங்க ளாக பெண்களுடைய உடலை உருவாக்கியிருப் பது’ நமது சமூகம்தான். பெண் உடலைப் பற்றிய இத்தகைய பார்வையை எப்போது களைகிறோமோ அப்போதுதான் பெண்களுக்கு இதிலிருந்து விடுதலை.