states

அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை என்ன?

சென்னை,செப்.16- தமிழகத்திலுள்ள அரசுப் போக்கு வரத்துக் கழகங்களில் பணியை முறையாக செய்யாமல் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சைதாப்பேட்டை பணிமனையில் நடத்து நராக பணியாற்றி வந்த பாலச்சந்தர் என்பவர் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக் கப்பட்டு, பணிநீக்கம் செய்யப்பட்டார். பணி நீக்கத்துக்கு ஒப்புதல் கோரி தொழிலாளர் நலத்துறை துணை ஆணையரை, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அணுகியது. அப்போது, விசாரணை குறித்து  தகவல்கள் முறையாக இணைக்கப் படாததால் பணி நீக்கத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார். இதை எதிர்த்து சென்னை மாநகர போக்கு வரத்துக் கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப் பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், இந்த விவகாரத்தை மீண்டும் விசாரிக்குமாறு தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கு உத்தர விட்டுள்ளது.மேலும் தனது உத்தரவில், போக்குவரத்துக் கழகங்களில் தவறி ழைக்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள், ஊழல் உள்ளிட்ட சில காரணங்களுக்காக நடவடிக்கை எடுப்பதில்லை என குறிப்பிட்டுள்ளார். இது போன்ற விவகாரங்களில் அதிகாரி கள் உரிய முறையில் பணிகளை செய்யாத தால் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாகக் குறிப்பிட்ட நீதிபதி, தங்களது பணிகளை முறையாக மேற்கொள்ளாமல் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது  ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து  போக்குவரத்துக் கழகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப போக்குவரத்து துறை  செயலாளருக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.

;