states

தீக்கதிர் விரைவு செய்திகள்

பேரவைத் தலைவர் முடிவுக்குக் கட்டுப்படுவோம்:  ஓ. பன்னீர்செல்வம்

மதுரை, அக்.16- எதிர்க்கட்சித் துணைத் தலைவர் யார் என்பது குறித்து சபாநாயகர் எடுக் கும் முடிவே இறுதியானது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். ஞாயிறன்று மதுரை விமானநிலையத்திற்கு வந் திருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் செய் தியாளர் ஒருவர், எதிர்க் கட்சித் துணைத்தலைவர் பொறுப்பு வேறொரு வருக்கு அளிக்கப்பட்டுள்ள தாக சபாநாயகருக்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளதே எனக் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த அவர்,” ஈபிஎஸ் அளித்த கடிதம் மீது  சபாநாயகர் எடுக்கும் முடி வுக்கு கட்டுப்படுவோம். மக்க ளின் அடிப்படைப் பிரச்சனை களை எதிர்க்கட்சி என்ற முறையில் சட்டமன்றத்தில் பேசுவோம் என்றார்.

ஜனாதிபதிக்கு கண்புரை  அறுவை சிகிச்சை

புதுதில்லி, அக்.16- இந்தியாவின் 15-ஆவது குடியரசுத் தலைவராக திரௌ பதி முர்மு கடந்த ஜூலை  25-ஆம் தேதி பொறுப்பேற் றார். 64 வயதான அவருக்கு ஞாயிறன்று தில்லி ராணுவ மருத்துவமனையில் கண் புரை அறுவை சிக்சை செய்யப் பட்டதாக குடியரசுத் தலை வர் மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அறுவைச் சிகிச்சை வெற்றி கரமாக முடிந்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டதாக அவர் தமது அறிக் கையில்  தெரிவித்துள்ளார்.

 மைக்கை வீசியெறிந்த அமைச்சர்

மாவ்,(உ.பி.,), அக்.16- உத்தர பிரதேச மாநில பாஜக அரசின் மீன்வளத் துறை அமைச்சர்  சஞ்சய் நிஷாத். இவர் மாவ் நகரில் நடந்த கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.  மேடை யில் அவர் பேசத் தொடங்கி னார் ஆனால், கூட்டத்தில் இருந்தவர்கள் யாரும் அதைப் பொருட்படுத்தாமல் அவர்களுக்குள் பேசிக்  அர சியல்வாதியா? அப்படி யென்றால் நீங்கள் பேசுங் கள். இல்லையென்றால் என் னுடைய பேச்சை கவனி யுங்கள் எனக் கூறி  மைக்கை வீசி எறிந்துள்ளார்.

மணீஷ் சிசோடியாவை கைது செய்கிறது சிபிஐ?

புதுதில்லி, அக்.16- தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத் திய புலனாய்வுப் பிரிவினர் (சிபிஐ) திங்கள்கிழமை கைது செய்வார்கள் எனத் தெரிகிறது.  தில்லியில் அமல்படுத் தப்பட்ட புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடை பெற்றதாக புகார் எழுந்த நிலையில் சம்மன் அனுப்பப் பட்டுள்ளது. மதுபானக் கடைகளுக்கான உரிமம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஐஏஎஸ் அதிகாரி, மூத்த அதிகாரி களின் 30 இடங்களில் சிபிஐ சமீபத்தில் சோதனை நடத்தி யது.  இந்த வழக்கில் 15 பேர்  மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள சிபிஐ, அதில் முதல் நபராக மணீஷ் சிசோடியாவை சேர்த்துள் ளது.  இந்த நிலையில் திங்கள் காலை 11 மணிக்கு ஆஜராகு மாறு சிபிஐ தனக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக சிசோ டியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பதிவில், “ எனது  வீட்டில் 14 மணி நேரம் சிபிஐ  சோதனை நடத்தியது. எனது வங்கி லாக்கரிலும் தேடி னார்கள், எதுவும் கிடைக்க வில்லை. எனது கிராமத்தி லும் அவர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை. இப்  போது திங்கள் காலை 11  மணிக்கு சிபிஐ தலைமை யகத்துக்கு என்னை அழைத்  திருக்கிறார்கள். நான் சென்று  முழுமையாக ஒத்துழைப் பேன். சத்யமேவ ஜெயதே” எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சவு ரப் பரத்வாஜ் கூறுகையில், “சிசோடியா திங்கள்கிழ மையே கைது செய்யப்படு வார். இந்த நடவடிக்கை குஜ ராத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்காகத் தான்” எனக் கூறியுள்ளார்.

அநேக மாவட்டங்களில்  இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, அக்.16- தமிழகத்தில் 27 க்கும் மேற்பட்ட மாவட்டங் களில் திங்களன்று (அக்.17)  கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், “தமிழகப்  பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, திங்களன்று தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்க ளில் இடி மின்னலுடன் கூடியலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக் கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னி யாகுமரி, இருப்பத்தூர், கிருஷ்ணகுரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக் கோட்டை, சிவகங்கை, மதுரை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதி களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத் துடன் காணப்படும். நகரில் சில இடங்க ளில் மழை பெய்யும்.” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

தனியார் மருத்துவக் கல்லூரி கட்டண உயர்வு அநீதியானது: பாமக

சென்னை, அக்.16-  தனியார் மருத்துவக் கல்லூரி கட்டண  உயர்வு அநீதியானது, அதனை உடனடி யாக குறைக்க ஆணையிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணத்தை ரூ.35 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை உயர்த்தி கட்டண நிர்ணய குழு ஆணை பிறப்பித்தி ருக்கிறது. தனியார் மருத்துவ பல்கலைக் கழகத்தில் அதிகபட்ச ஆண்டுக் கட்டணம் ரூ.29.40 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது. இது அநீதியானது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 விழுக்காடு இடங்களுக்கு அரசு கல்லூரி களுக்கான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என மருத்துவ ஆணையம் ஆணை யிட்டிருந்தது. அதை நீதிமன்றங்கள் வாயி லாக தனியார் கல்லூரிகள் தகர்த்ததை தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் முயலவில்லை. தனியார் மருத்துவக் கல்லூரி கட்டணம் தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் திருத்தப்பட்ட குறிப்பாணையை வெளியிடும் வரை இப்போதுள்ள கட்டணமே தொடர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி ஆணை யிட்ட நிலையில் இந்த கட்டண உயர்வு நீதி மன்ற அவமதிப்பாகி விடும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இப்போது வசூலிக்கப்படும் கட்டணமே ஏழை மற்றும் நடுத்தர மக்களால் எட்டிப் பிடிக்க முடியாதது எனும் நிலையில், அதை மேலும் மேலும் உயர்த்துவது நியாயமற்றது. பணக்காரர்களுக்கு மட்டும் தான் மருத்துவக் கல்வி என்ற நிலையை அது உருவாக்கி விடும். தனியார் கல்லூரிகளிலும் ஏழை மாண வர்கள் பொருளாதார சுமையின்றி மருத்து வம் படிக்கும் நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கு இந்த கட்டண உயர்வு பெரும் தடையாக இருக்கும் என்பதால் அதை  உடனடியாக திரும்பப் பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என்று தெரிவித்துள்ளார்.

தருமபுரி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு சுமார் 1.85 லட்சம்  கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் காவிரி கரையோரம் வசிக்கும்  மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

;