அந்தமான் செயலாளர் சஸ்பெண்ட்
போர்ட்பிளேயர், அக். 17 - அந்தமான் - நிகோபார் தலைமைச் செயலாளராக இருந்த போது எழுந்த பாலி யல் வன்கொடுமை புகாரில் ஐஏஎஸ் அதிகாரி ஜிதேந்திர நரைன் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள் ள்ளது. வேலை தேடி வந்த 21 வயது பெண்ணை ஜிதேந் திர நரைன் மற்றும் சக அதி காரிகள் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் தேர்தல்: வாக்குப் பதிவு நிறைவு
புதுதில்லி, அக்.17- இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் தேர்த லுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. கடைசியாக கடந்த 2000-ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில், சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் திங்களன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, சசி தரூர் ஆகி யோர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டது. இதன்மூலம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு சோனியா காந்தி குடும்பத்தைச் சாராத ஒருவர், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படவுள்ளார். அக்டோபர் 19 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
அதிமுக பொன் விழா நிறைவு: 3 அணிகள் தனித்தனியே கொண்டாடின
சென்னை, அக்.17- அதிமுகவின் 51-ஆம் ஆண்டு தொடக்க விழாவை 3 அணிகளாக பிரிந்து கொண்டாடினர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எம்ஜி ஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சென்னை தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக கொடி ஏற்றி எம்.ஜி. ஆரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து சமாதான புறாக்களை ஓ.பன்னீர்செல் வம் பறக்கவிட்டார். எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் சசிகலாவால் வைக்கப்பட்ட கல்வெட்டுடன் கூடிய கொடிக்கம்பம் உள்ளது. ஆனால், இன்று புதிதாக ஒரு கொடிக்கம்பத்தை வைத்து அதில் கொடியேற்றப்பட்டுள்ளது. கல்வெட்டில் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது. ராமாபுரம் எம்ஜிஆர் இல்லத்தில் சசிகலா, கொடியேற்ற வுள்ளார். இதேபோன்று தமிழகம் முழுவதும் அதிமுக பொன்விழா நிறை வை கட்சியினர் தனித்தனியாக கொண்டாடி வருகின்றனர்.
ஒரே நாடு; ஒரே உரம் திட்டம் துவக்கம்
புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறு வனத்தில், ‘விவசாயிகள் சம்மேளனம் 2022’ எனும் நிகழ்ச்சி திங்களன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், “ஒரே நாடு ஒரே உரம்” என்ற புதிய திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், யூரியா, டி-அம்மோனியம் பாஸ்பேட் (டிஏபி), மியூரேட் ஆப் பொட்டாஷ் (எம்ஓபி) மற்றும் என்பிகே போன்ற அனைத்து மானிய உரங்களையும் வழங்கும் நிறுவனங்கள், ‘பாரத்’ என்ற ஒரே பெயர் பொருந்திய பிராண்டின் கீழ் சந்தைப்படுத்துவது கட்டாயம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தில்லி துணை முதல்வர் ஆஜர்
சில வாரங்களுக்கு முன் மதுபானக் கொள்கை விவகாரம் தொடர்பாக, தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. இந் நிலையில், இந்த வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகு மாறு, மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி மணீஷ் சிசோடியா தில்லி சிபிஐ அலுவலகத்தில் திங்களன்று காலை விசாரணைக்கு ஆஜரானார்.
மற்ற மாநிலங்களிலும் இந்தியில் எம்பிபிஎஸ்
மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள 13 மருத்துவக் கல்லூரி களில், இந்தி வழி எம்.பி.பி.எஸ். படிப்பு அறிமுகப்படுத்தப் பட்டு உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்து வரு கிறது.”நான் மற்ற மாநிலங்களில் உள்ள முதலமைச்சர்களை நேரில் சந்தித்து அவர்களிடமும் இந்தி வழியில் மருத்துவப் படிப்பு களை நடத்தக் கோரி கூறுவேன்” என்று மத்தியப் பிரதேச மாநில பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் மாநிலம் உருவாக்கிய இந்தி மொழியிலான மருத்துவ புத்தகங்களை மற்ற மாநிலங்களுக்கு வழங்கத் தயார் என்றும் சவுகான் குறிப்பிட்டுள்ளார்.
மோடி துரோகம்: சு.சாமி குற்றச்சாட்டு
“லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தை சீனாவின் ஒரு பகுதியாக காட்டும் விதமாக சீன மொழியில் அந்த பகுதிகளை குறிப்பிட்டு எஸ்சிஓ மாநாட்டில் சீனா வழங்கி இருக்கி றது. மோடி இந்த கூட்டத்துக்கு சென்று, இந்தியாவின் தேச நலனுக்கு துரோகம் செய்துள்ளார். கடந்த 1995-ஆம் ஆண்டு பரஸ்பரம் ஒப்புக்கொண்ட எல்லைக் கட்டுப்பாட்டு கோடுகளை கடந்து டெப்சாங், கல்வான், கைலாஷ் மலைகளின் பெரும் பகுதி களை சீனா ஆக்கிரமித்து உள்ளது. ஆனால், இதை பற்றி எல்லாம் மோடி கண்டு கொள்ளாமல் உள்ளார்” என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி தன்னுடைய டுவிட்டர் பதிவில் குற்றம் சாட்டியுள்ளார்.
நடிகைகள் பற்றி கடவுளுக்கே வெளிச்சம்: ராம்தேவ் இழிபேச்சு
“சல்மான் கான் போதைப்பொருள் உட்கொள்கிறார், அமீர் கான் பற்றி எனக்குத் தெரியாது. ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் போதைப்பொருள் வழக்கில் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நடிகைகளைப் பொறுத்தவரை கடவுள் ஒரு வரே அவர்களைப் பற்றி அறிவார். திரையுலகம் முழுவதும் போதை இருக்கிறது, அரசியலிலும் போதை இருக்கிறது, தேர்தல் நேரத்தில் மது விநியோகம் செய்யப்படுகிறது” என்று பதஞ்சலி என்ற கார்ப்பரேட் நிறுவனத்தின் முதலாளியும், சாமியாருமான பாபா ராம்தேவ் பேசியுள்ளார்.
என்ஜீனியரை செல்போனில் மிரட்டிய உ.பி. பாஜக எம்.பி.
உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் குப்தா, என்பவர் அம்மாநில நீர்ப்பாசனத் துறையில் உதவிப் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர், பாரபங்கி தொகுதியின் பாஜக எம்.பி. உபேந்திர ராவத் தன்னை செல்போனில் மிரட்டியதாக காவல் நிலையத்தில் புகார் அளித் துள்ளார். தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனவும் அவர் காவல்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளார். தனது பாது காப்பு உறுதி செய்யப்படும் வரை தனக்கு விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
சித்தராமையாவை ஒருமையில் திட்டிய பாஜக அமைச்சர்
“என்னை ஒரு முட்டாள் என்று சித்தராமையா கூறியுள்ளார். அவர் வழக்கறிஞர் தொழிலை எப்படி செய்தார் என்பதை நான் பார்த்துள்ளேன். அவர் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே வழக்க றிஞர் தொழில் செய்துள்ளார். அவர் ஒரு ராட்சசர். அதனால் தான் சாமுண்டீஸ்வரி தொகுதியில் அவரை மக்கள் தோற்கடித்து முகத்தில் கரியை பூசி அனுப்பினர். அவர் தேவகவுடா முதுகில் குத்தியவர்” என்று கர்நாடக பாஜக எம்.பி. ஸ்ரீராமுலு பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் பேட்டி முழுவதிலும் சித்த ராமையாவை ஒருமையிலேயே ஸ்ரீராமுலு திட்டியுள்ளார்.
சித்ரதுர்காவில் பொறுப்பு மடாதிபதி
சித்ரதுர்கா முருகா ராஜேந்திரா மடத்திற்கு சொந்தமான பள்ளி யின் விடுதியில் தங்கி படித்த மாணவிகளுக்கு, பாலியல் துன்புறுத்தல் அளித்த புகாரின் பேரில், அந்த மடத்தின் தலை வர் சிவமூர்த்தி முருகா சரணரு கைது செய்யப்பட்டார். தற்போது அவர் சிறையில் இருக்கிறார். இந்நிலையில், சிவமூர்த்தி தனக்குப் பதிலாக முருகா மடத்தின் பொறுப்பு மடாதிபதியாக பசவபிரபு ஸ்ரீயை நியமித்தார். அவர் ஞாயிறன்று மடத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.
3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, அக். 17- தமிழ்நாட்டில் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப் புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழ டுக்கு சுழற்சி காரணமாக, அக்டோபர் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ண கிரி, தர்மபுரி, சேலம், திருப் பத்தூர், வேலூர், இராணிப் பேட்டை, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், மயி லாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதி களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப் புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. மேலும் அக்டோபர் 21ஆம் தேதி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக் குறிச்சி, கடலூர், மயிலாடு துறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக் கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னி யாகுமரி, திருநெல்வேலி, சிவகங்கை, திருச்சிராப் பள்ளி, பெரம்பலூர், அரி யலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக் கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்திய மின் ஊழியர் கூட்டமைப்பு நிர்வாகிகள்
சென்னை, அக். 17 - இந்திய மின் ஊழியர் கூட்டமைப்பின் 9வது அகில இந்திய மாநாடு அக். 13-15 தேதிகளில் சண்டிகரில் நடைபெற்றது. மாநாட்டில், கூட்டமைப்பின் தலைவராக எளமரம் கரீம் எம்.பி., செயல் தலைவராக தேவ்ராய், பொதுச் செயலாளர் பிராசந்தோ நந்தி சௌத்ரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்திலிருந்து கூட்டமைப்பின் பொருளாளராக எஸ்.இராஜேந்திரன், துணைத்தலைவராக தி.ஜெய்சங்கர், இணைச் செயலாளர்களாக கே.அருள் செல்வன், இ.விஜய லட்சுமி ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்களாக கே.ரவிச் சந்திரன், டி. பழனிவேல், எஸ்.உமாநாத், எம்.சாலட் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்ட னர்.