states

கால்நடை மருத்துவப் படிப்பு: தரவரிசைப் பட்டியல் வெளியீடு

சென்னை, ஜூலை 26- தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டுக்கான  மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த 12 ஆம் தேதி முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கியது.இதையடுத்து, மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் புதனன்று (ஜூலை 26) காலை 10 மணிக்கு வெளியிட்டது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் சேர்க்கைக்கான கலந் தாய்வு நடைபெறுகிறது. சிறப்புக் கலந்தாய்வு 7.5 விழுக்காடு மாணவர்களுக்கு கலந்தாய்வு மற்றும் பி.டெக் படிப்பு களுக்கான கலந்தாய்வு மட்டும் நேரடியாக நடைபெற உள்ளது. மற்ற அனைத்து பாடங்களுக்கும் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறுகிறது.