states

காலநிலை மாற்றத்திற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்த பிரிக்ஸ் நாடுகள் வலியுறுத்தல்

புதுதில்லி, மே 14- காலநிலை மாற்றச் சமாளிப்பு ஒத்து ழைப்பை வலுப்படுத்தி, ஒத்துழைப்புத் துறைகளை விரிவாக்கி, ஒத்துழைப்பு அம்சங்களை அதிகரிக்க பிரிக்ஸ் நாடு கள் பாடுபட வேண்டும் என்று பிரிக்ஸ் நாடு கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் வலி யுறுத்தப்பட்டுள்ளது. மே 13ஆம் நாள் காணொலி வழி யாக நடைபெற்ற காலநிலை மாற்றச் சமாளிப்பு குறித்த உயர்நிலை மாநாட்  டில், பிரிக்ஸ் நாடுகளின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில், ஒவ்வொரு நாடுகளின் கொள்கை களையும் நடவடிக்கைகளையும் விவா தித்து, கூட்டறிக்கையை ஏற்றுக்கொண் டுள்ளனர். பலதரப்புவாதம் என்பது, காலநிலை மாற்றம் உள்பட உலகளாவிய அறை கூவல்களைச் சமாளிப்பதற்கான முக்கிய வழிமுறையாகும் என்று இம்மாநாட்டில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், காலநிலை மாற்ற விவகா ரத்தை அரசியலாக்குவதையும், அனைத்து விதமான தன்னிச்சை மற்றும் பாதுகாப்பு வாதங்களையும் எதிர்ப்பதாக, இந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.